சிவகார்த்திகேயனின் டான் ஆடியோ வெளியீடு பிளான் இது தானா...காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ஆடியோ வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கன்ஃபார்ம் ஆன ரிலீஸ் தேதி

கன்ஃபார்ம் ஆன ரிலீஸ் தேதி

பல முறை தள்ளிவைக்கப்பட்டு, தற்போது டான் படம் மே 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்ட நிலையில், சமீபத்தில் மூன்றாவது சிங்கிளாக பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் இந்த ரோலிலா

சிவகார்த்திகேயன் இந்த ரோலிலா

கடந்த ஆண்டு ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட ஜலபுல ஜங்கு பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்ததுடன் செம ஹிட் ஆனது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 17 வயது பையனாக நடித்துள்ளாராம். காலேஜ் செல்லும் இளைஞராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம் ரொமான்டிக் காலேஜ் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அவரே சொல்லிருக்காரா

அவரே சொல்லிருக்காரா

டான் படத்தில் தனது ரோல் பற்றிய தகவலை சிவகார்த்திகேயனே யூட்யூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். மேலும் அவர் அயலான் படம் பற்றி கூறுகையில், பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டுள்ள அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது 2023 ம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

ஆஹா செம பிளானா இருக்கே

ஆஹா செம பிளானா இருக்கே

லேட்டஸ்ட் தகவலாக டான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மே 6 ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆடியோ வெளியீட்டு விழாவின் போதே டிரைலரையும் திரையிட்டு காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதே சமயம் யூட்யூப்பிலும் டிரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட உள்ளார்களாம்.

விரைவில் அறிவிப்பு வரும்

விரைவில் அறிவிப்பு வரும்

படத்தின் ஆடியோ ரிலீஸ், டிரைலர் ரிலீஸ் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் படக்குழுவினர் மிக ரகசியமாக வைத்துள்ளனராம். இருந்தாலும் மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 13 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் டான் படம் ரிலீசாக உள்ளதால் ஆடியோ விழாவையே மிகப் பெரிய ப்ரொமோஷனாகவும் நடத்த உள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X