»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக நடிகர்களும், நடிகைகளும் தங்கள் சம்பளத்திலிருந்து நன்கொடைவழங்க வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் காலமான பழம்பெரும் நடிகர் வி.கே. ராமசாமிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நேற்றுநினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜயகாந்த் பேசுகையில்,

நடிகர் சங்கத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் என் பெயர் இருக்கும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன்அடிக்கடி கூறுவதாக வி.கே.ஆர். எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

சிவாஜி இருக்கும்போதே நடிகர் சங்கக் கடனை அடைத்துவிட முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை.இருந்தாலும் அதன் பின்னர் கடனை அடைத்து, அடகு வைத்த பத்திரங்களை வி.கே.ஆர். கையாலேயே வாங்கவைத்தோம். அந்தப் பெருமை எங்களுக்கு நிறைவைத் தருகிறது.

வி.கே.ஆர். விருப்பப்படி நடிகர் சங்க வளாகத்திலேயே சிவாஜியின் பெயரில் தனியாக ஒரு கட்டடம் கட்டப்படும்.நலிந்த கலைஞர்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்படும். பொங்கல் தினத்தன்று 500 பேருக்கு இலவச வேஷ்டி,சட்டைகள் வழங்கப்படும்.

இவை அனைத்திற்கும் ஏராளமான நிதி தேவைப்படுகிறது. எனவே வரும் பொங்கல் திருநாளிலிருந்து நடிகர்களும்நடிகைகளும் தங்களுடைய சம்பளம் பணத்திலிருந்து எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு பணத்தைநன்கொடையாக நடிகர் சங்கத்திடம் கொடுக்க வேண்டும்.

அந்த நன்கொடையைக் கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு நலத் திட்ட உதவிகள் செய்து தரப்படும் என்றார்விஜயகாந்த்.

அஞ்சலிக் கூட்டத்தில் கமல் பேசுகையில்,

எல்லோருக்கும் எந்நேரத்திலும் சாவு வரலாம். யாரும் 200 அல்லது 300 ஆண்டுகள் வாழப் போவதில்லை.ஆனால் எத்தனை பேருக்கு இதுபோன்ற இரங்கல் கூட்டம் நடக்கும்?

நான் மதிக்கும் மாபெரும் கலைஞர் வி.கே.ஆர். அவர் வாழ்விலும் கஷ்டம் இல்லாமல் இல்லை. ஆனால்சோகத்தைக் கூட சிரிக்கும்படி சொல்பவர் அவர்.

இது இரங்கல் கூட்டமே அல்ல. நமக்குத்தான் இரங்கல். அவருக்கோ ஏற்றம் என்றார் கமல்.

விஜயகாந்த் தலைமை வகித்த இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் நடிகர்கள் கமலஹாசன், நேப்போலியன்,சரத்குமார், பார்த்திபன், சத்யராஜ், சிவக்குமார், கவுண்டமணி, ராஜேஷ், மன்சூர் அலிகான், எஸ்.வி. சேகர், நாகேஷ்,நடிகை ரேவதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil