»   »  அது வேற.. இது வேற.. பிரிச்சுப் பாருங்க.. சிம்புதேவன் அட்வைஸ்!

அது வேற.. இது வேற.. பிரிச்சுப் பாருங்க.. சிம்புதேவன் அட்வைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி ஒரு படம், புலி வேற படம். இரண்டும் வேறு வேறு.. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது வேறு படம், இது வேறு படம் என்று புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன் கூறியுள்ளார்.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

"ஒரிஜினல்" அடிமைப் பெண் படத்தின் கதையை பெரிய அளவில் யாரும் பாகுபலி படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. ஆனால் டெக்னிக்கலாக இது பெருசா, அது பெருசா என்று இப்போதே புலி படத்தோடு பாகுபலியை ஒப்பிட்டுப் பேச்சுக்கள் கிளம்பி விட்டன.


இதை புலி டீம் ரசிக்கவில்லை. பகிரங்கமாகவே இப்படி ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்று கூற ஆரம்பித்துள்ளனர் புலி டீமைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக இயக்குநர் சிம்புதேவன், தங்களது உழைப்பை வேறு ஒரு உழைப்புடன் ஒப்பிடுவது நியாயமாக இருக்காது என்று கூறியுள்ளார்.


பிரமாண்ட புலி

பிரமாண்ட புலி

விஜய் நடித்துள்ள பிரமாண்டப் படம்தான் புலி. படம் ரொம்ப நாட்களாகவே அவரது ரசிகர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களும் கூட இந்தப் படத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.


பிரமிக்க வைக்கும் புலி

பிரமிக்க வைக்கும் புலி

புலி படம் பிரிமிக்கத் தக்க வகையில் இருப்பதாக புலி டீம் வட்டாரம் பேச ஆரம்பித்துள்ளது. சில பல நகாசு வேலைகளைச் செய்து முடித்தபோது படம் இன்னும் விறுவிறுப்பாகியுள்ளதாக கூறுகிறார்கள்.


பீரியட் புலி

பீரியட் புலி

இது ஒரு பீரியட் படம். ராஜா ராணி கதை. பழிக்குப் பழி, அடிதடி, காமெடி, சென்டிமென்ட் என பலவற்றையும் கலந்து கொடுத்துள்ளனராம். படம் விஜய் ரசிகர்களஐ மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவரும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.


சிறப்பான புலி

சிறப்பான புலி

ஆனால் சிலர் பாகுபலி படத்துடன் புலியை ஒப்பிட்டுப் பேசுவதை புலி டீம் ரசிக்கவில்லை, விரும்பவில்லை. பாகுபலியை விட சிறப்பான படமாக புலி உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள்.


கிராபிக்ஸ் புலி

கிராபிக்ஸ் புலி

பாகுபலியைப் போலவே இந்தப் படமும் விஎப்எக்ஸ் புண்ணியத்துடன்தான் வெளியாகிறது. இருப்பினும் பாகுபலியை விட நேர்த்தியாக இதில் கிராபிக்ஸ் காட்சியை வடிவமைத்துள்ளாராம் சிம்புதேவன்.


ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்ட புலி

ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்ட புலி

இதுகுறித்து சிம்புதேவன் கூறுகையில், புலி ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டது. எந்தப் படத்தையும் இதனுடன் ஒப்பிட வேண்டாம். முற்றிலும் வேறுபட்ட படம் இது. வேறுபட்ட களம் இது.


போரே இல்லாத புலி

போரே இல்லாத புலி

இந்தப் படத்தில் போர்க்களக் காட்சிகள் கிடையாது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மாறுபட்ட படம் இது. கதை அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


திருப்தி தரும் புலி

திருப்தி தரும் புலி

ரசிகர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்புடனும் வராமல் இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் முழு திருப்தியுடன் வெளியே செல்ல முடியும். எந்தப் படத்தையும் இதை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். எங்களது உழைப்பை வேறு உழைப்புடன் ஒப்பிடுவது நியாயமாகாது என்று கூறியுள்ளார் சிம்பு தேவன்.


ஹன்சிகா புலி

ஹன்சிகா புலி

அதேபோல படத்தின் நாயகியரில் ஒருவரான ஹன்சிகாவும் கூட பாகுபலியுடன் இதை ஒப்பிடக் கூடாது என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், பாகுபலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் பேன்டசி ஆகும். எனவே புலியுடன் அதை ஒப்பிடுவது நியாயமற்றது.


அது பலி .. இது புலி

அது பலி .. இது புலி

இரு படங்களும் மாறுபட்ட கதைக்களத்துடன் கூடியவை. எனவே ஒப்பிடுவது சரியாக இருக்காது. இது மாறுபட்ட படமாகும். படம் பார்க்கும்போது அது தெரியும்.


பெரிய பட்ஜெட் புலி

பெரிய பட்ஜெட் புலி

இது பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரமாண்டப் படம். படத்தில் அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளன. அனைவரையும் இது மகிழ்ச்சிப்படுத்தும் படமாக இருக்கும்.


திரையுலகம் காணாத புலி

திரையுலகம் காணாத புலி

தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட படம். தமிழ்த் திரையுலகை வேறு லெவலுக்குக் கொண்டு செல்லும் படம் இது என்றார்.


பிறகென்ன.. கண்களைத் திறந்து வைத்து காதுகளைக் கூர்மையாக்கி படத்தை ரசிக்கத் தயாராவோம்...!English summary
Director Chimbu Devan has urged the fiml buffs not to compare his Puli movie with any other movie, partucularly Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil