Don't Miss!
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கஷ்டப்பட்டு வந்தேன்னு சொல்லாதீங்க.. இஷ்டப்பட்டு வரணும்.. சாண்டி மாஸ்டர் சொல்லும் அட்வைஸ்!
சென்னை: மானாட மயிலாட சீசன் 1 மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சாண்டி மாஸ்டர்.
தனது குருவான கலா மாஸ்டர் கொரியோகிராப் செய்ய மானாட மயிலாட சீசன் 1 இல் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட சாண்டி மாஸ்டர் கொரியாகிராப் செய்த டீம் டைட்டில் வின்னர் ஆகவும் வந்தனர்.
தான் பெற்ற வெற்றியை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் நடன இயக்குநரான சாண்டி மாஸ்டர்.
அப்பாவை
மறக்கமுடியாமல்
அழுகிறாள்
மீனாவின்
மகள்..பார்க்கவே
பாவமாக
இருக்கு..கலங்கும்
கலா
மாஸ்டர்!

மானாட மயிலாட கொடுத்த வெற்றி
மானாட மயிலாட சீசன் 1 மூலம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சின்ன சின்ன படங்களுக்கு கொரியாகிராப் செய்து வந்தார். தமிழ் பிக் பாஸ் சீசன் 3இல் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். மானாட மயிலாட வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார் சேண்டி மாஸ்டர். கொரியோகிராப் செய்வது மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சாண்டி மாஸ்டர்.

படங்களில் வாய்ப்பு
2014 ஆம் ஆண்டு நடன இயக்குநராக அறிமுகமான இவர் தண்ணில கண்டம், வாலு போன்ற பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். அது மட்டும் இல்லாமல் கககபோ, ஜித்தன் 2 போன்ற பல படங்களுக்கு கொரியோகிராப் செய்தார்.
2016 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்திற்கு நடன இயக்குநராக பணியாற்றி மிகவும் பிரபலமானார். தற்போது பல டான்ஸ் ஷோக்களுக்கு நடுவராகவும் உள்ளார்.

பிக் பாஸ் மூலம் வந்த வாய்ப்பு
பிக் பாஸில் கலந்து கொண்டு கமல் ஹாசனுடன் நெருக்கமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி சமீபத்தில் கமல் ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படத்தில் கொரியோகிராப் செய்தார். விக்ரம் படத்தில் இவரது டான்ஸ் ஸ்டெப்புகள் அனைத்தும் மிகவும் பிரபலமானது. அதிலும் பத்தல பத்தல பாட்டு கமல்ஹாசன் ஆடும் சிக்னேச்சர் ஸ்டெப் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது. இவரது ஸ்டெப்புக்கு கமல்ஹாசனும் என்ஜாய் செய்து ஆடினார். அந்த பாடல் வெற்றி பெறுவதற்கு அந்த டான்ஸ் ஸ்டெப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

பல படங்கள் கைவசம்
தற்போது சேண்டி மாஸ்டர் பல முன்னணி இயக்குநர்களுடனும் பணிபுரிந்து வருகிறார். தற்போது தான் டான்ஸ் மாஸ்டராக ஆவதற்கு காரணத்தை, அதில் தனது ஈடுபாடு பற்றியும் கூறியுள்ளார். அவர் கூறிய இருப்பதாவது," பலரும் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தேன் என்று கூறுவார்கள் நாம் எதற்காக கஷ்டப்படுகிறோம் நமது லட்சியத்தை அடைவதற்கே கஷ்டப்படுகிறோம் , உண்மையில் கஷ்டப்பட்டு உழைப்பது இல்லை வெற்றி, இஷ்டப்பட்டு உழைப்பது தான் வெற்றி, நானும் பலமுறை எனது வாழ்க்கையில் ஜெயிக்க கஷ்டப்பட்டேன் என்று கூறிய துண்டு ,ஆனால் எனது லட்சியத்தை அடைவதற்கே நான் கஷ்டப்பட்டேன்.

200 ரூபாய்க்கு டான்ஸ்
நான் பலமுறை ஸ்டேஜ்ஜில் ஆடி உள்ளேன், கோவில் திருவிழாவில் 200 ரூபாய்க்கு டான்ஸ் ஆடி உள்ளேன் , சிறிய சிறிய சம்பளத்திற்கு நிறைய பாடல்களுக்கு டான்ஸ் ஆடி உள்ளேன். ஆனால் அதெல்லாம் கடந்து வந்தால் தான் நாம் நினைத்த வெற்றியை அடைய முடியும் என்று கூறியுள்ளார் சாண்டி மாஸ்டர்.