twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமை விட்டுடுங்க! - கரிகாலன் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

    By Shankar
    |

    Vikram
    கரிகாலன் படம் தொடர்பான வழக்கை தயாரிப்பாளர்களான நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம். இதில் தேவையில்லாமல் படத்தின் ஹீரோ விக்ரமை சேர்க்க வேண்டாம் என படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விக்ரம் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளரையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளார். அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இப்படத்துக்காக ராஜா காலத்து ஆடை ஆபரணங்கள் பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டு உள்ளன. அரங்குகளும் அமைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் வழக்கு தொடர்ந்து இருப்பது படத்தை வெகுவாக பாதித்துள்ளது.

    இதுகுறித்து 'கரிகாலன்' பட தயாரிப்பாளர்கள் எஸ். பார்த்திபன், எஸ்.எஸ். வாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குனரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்கள் கடமை. இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனான விக்ரமை சம்பந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல்.

    இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ராஜசேகர் மீது மானநஷ்ட வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம். நேர்மையான முறையில் வழக்கை சந்திப்போம்," என்று கூறியுள்ளனர்.

    English summary
    The producers of Vikram's new historical movie Karikalan appealed to exclude him from the copy right case filed by Rajasekar, Porur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X