»   »  மகள் திருமணம்... ப்ரியமுடன் அழைக்கிறார் முன்னணி ஒளிப்பதிவாளர் ப்ரியன்!

மகள் திருமணம்... ப்ரியமுடன் அழைக்கிறார் முன்னணி ஒளிப்பதிவாளர் ப்ரியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கண்ணை உறுத்தாத ஔிப்பதிவு, பிரமாண்டத்தை படம்பிடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஔிப்பதிவாளர் ப்ரியன். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா ஆர்வத்தால் முன்னணி ஔிப்பதிவாளரானவர், இருபது வருட சினிமா அனுபவத்தில் எந்த விமர்சனத்திலும் ஆளாகாமல் உழைப்பையும், ஔிப்பதிவையும் நம்பி கதையை கவிதையாக காட்டியவர் ப்ரியன்.

தொடக்ககாலத்தில், சுஜாதா இன்டர்நேஷனல் நிறுவனத்தில் ஐந்து வருட ஔிப்பதிவு உதவியாளராக இருந்தார். ஔிப்பதிவில் சாதனைப் படைத்த பாலுமகேந்திரா, ராஜீவ் மேனன், இயக்குநர்கள் மணிரத்னம், சுரேஷ் மேனன் போன்றவர்களிடம் சினிமா கற்றுக் கொண்டார்.

DoP Priyan daughter's marriage

கே.எஸ்.அதியமான் இயக்கிய ‘‘தொட்டாச் சிணுங்கி'' இவரது முதல் படம். அடுத்து சேரனின், பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடிக்கட்டு... என்று வரிசையாக தொடக்கத்திலேயே தொடர் வெற்றிகளை நாட்டியவர். நாகேந்திரன் என்ற இவரது இயற்பெயரை, இவரின் மூத்த மகளான ப்ரியதர்ஷினியின் பெயரை சுருக்கி ப்ரியன் என்று பெயர் வைத்தவர் இயக்குநர் சேரன்.

இயக்குநர் ஹரியோடு ‘‘தமிழ்'' படத்தில் கைகோர்த்தவர் சிங்கம்-2 முடித்து சிங்கம்-3-க்கும் தயாராகிவிட்டார். கிட்டத்தட்ட 12 படங்கள் ஹரியோடு பயணித்த ப்ரியன், ஸ்டார், தெனாலி, வரலாறு, வல்லவன், திமிரு, தோரணை, வேலாயுதம்... என்று பல படங்களில் இவரது கேமரா திறமை பேசப்பட்டது.

இப்போது ப்ரியன் இல்லத்தில் ஒரு சுப நிகழ்ச்சி. ப்ரியன்-சுகன்யா தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ப்ரியதர்ஷினி, நியூட்ரிஷியன், டயட்டீஷியன் படித்தவர். இவருக்கும் ப்ரியனின் தங்கை மகனான பல் மருத்துவர் விஸ்வரூபனுக்கும் வருகிற மே 20ம் தேதி, மதுரையில், பசுமலை கோபால்
சாமி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களது வரவேற்பு விழா மே 29ம் தேதி, சென்னை, ராமாபுரம், ஜீவன் ஜோதி திருமண மண்டபத்தில் (எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்) விமரிசையாக நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்துவதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரையும் சந்தித்து ப்ரியமுடன் அழைத்திருக்கிறார் ப்ரியன்.

English summary
Leading cinematographer Priyan's daughter Priyadharshini's marriage will be held at Chennai on Mar 29th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil