டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த இருவர் யார்?
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டின் 3வது வாரத்தில் அதிரடியாக டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டு இருக்கிறது.
Recommended Video
14 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
கன்ஃபார்மா அந்த இருவர் தான் வெளியேறுவார்கள் என கணிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரம் நடந்த அரசியலால் அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டு வேறு ஒருவர் எலிமினேட் ஆகி உள்ளார் என்கிற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

டபுள் எவிக்ஷன்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள் டபுள் எவிக்ஷன் கேமை பிக் பாஸ் டீம் ஆரம்பித்துள்ளது. புதிதாக வைல்டு கார்டுகள் கூட உள்ளே வராத நிலையில், இப்படி அவசர அவசரமாக வீட்டில் உள்ளவர்களை வெளியே அனுப்பவதன் பின்னணி என்ன என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அபிநய் எலிமினேட்டட்
மொத்தம் 8 பேர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் அதிக நாட்கள் நீடித்த ஜெமினி கணேசன் பேரன் அபிநய், பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறி உள்ளதாக உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன. பாவனி இல்லாமல் அபிநய்க்கு வேலை இல்லை. அதனால், தான் இவ்வளவு சீக்கிரம் அவரை வெளியே அனுப்பி விட்டார்கள் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அபிநய்க்கு ஆதரவு
அதே சமயம் பிக் பாஸ் சீசன் 5ஐ விட அபிநய் பிக் பாஸ் அல்டிமேட்டில் நன்றாகவே விளையாடினார். ஆனால், அதற்குள் அவரை எலிமினேட் செய்தது நியாயம் இல்லை என சில ரசிகர்கள் அபிநய்க்கு ஆதரவாக கமெண்ட்டுகளை போட்டு அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

சினேகன் எஸ்கேப்
அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் அன் அஃபிஷியல் ஓட்டிங்கிலும் சினேகன் தான் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், இந்த வாரம் அவர் நிச்சயமாக வெளியே அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்கிற தகவல் பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ஷாரிக் அவுட்
அபிநய் உடன் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் வெளியேறியுள்ள இன்னொரு நபர் ஷாரிக். முதல் நாளிலேயே துணிச்சலாக ஓடிச் சென்று போனை எடுத்து தலைவரான ஷாரிக், பிக் பாஸ் ஜோடிகளில் டைட்டில் வின் பண்ணது போல பிக் பாஸ் அல்டிமேட்டிலும் ஃபைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எலிமினேட் செய்துள்ளனர்.

அன்ஃபேர்
ஷாரிக் டேஞ்சர் ஜோனிலேயே இல்லையே அவரை எப்படி எலிமினேட் செய்யலாம் என பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். கடைசி மூன்று இடத்தில் இந்த வாரம் தொடக்கம் முதலே ஷாரிக்கும் இடம்பெற்று வந்த நிலையில், கடைசி நேரத்தில் அனிதா சம்பத்தை முந்தி ஷாரிக் மேலே இருந்தார். ஆனால், சினேகனை காப்பாற்ற ஷாரிக்கை இந்த வாரம் எலிமினேட் செய்துள்ளனர் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அங்கேயும் அரசியலா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில எவிக்ஷன்கள் நடக்கும் போது அது ரசிகர்களுக்கே ரொம்ப ஷாக்கிங்காக இருக்கும். அதுபோன்ற ஒரு எவிக்ஷன் தான் இந்த வாரம் நடந்துள்ளது என்று ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் செய்து விமர்சித்து வருகின்றனர். கமல்ஹாசனுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் சினேகனை இந்த வாரம் காப்பாற்றி இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

டிரிபிள் எவிக்ஷன்
விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலைக்கு கமல் ஆளாகி இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி அவர் தொகுத்து வழங்கமாட்டார் என்கிற வதந்திகளும் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன. கமலுக்கு பதில், மறுபடியும் ரம்யா கிருஷ்ணனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் மீண்டும் முட்டிக் கொள்ளுமா? என ஏகப்பட்ட கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ரம்யா கிருஷ்ணனை தவிர்த்து சரத்குமார் உள்ளிட்ட வேற யாரையாவது ஹோஸ்ட்டாக போடுங்க என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. மேலும், கமலும் இனி வரமாட்டார் என்பது உறுதியானால் இந்த வாரம் டிரிபிள் எவிக்ஷன் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











