twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முத்தின கத்திரிக்காயில் இரட்டை அர்த்த வசனங்களா?

    By Shankar
    |

    சுந்தர் சி படங்கள் என்றாலே குடும்பத்தோடு போய் வாய்விட்டுச் சிரிக்கலாம் என்பார்கள். ஆனால் அவர் அடுத்து நடிக்கும் முத்துன கத்திரிக்காய் படத்தில் ஆபாச வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக ஒரு செய்தி கசிந்தது.

    விஷயத்தை படத்தின் இயக்குநர் வெங்கட் ராகவனிடம் சொல்லி, 'மெய்யாலுமா?' என்றால், 'அக்மார்க் பொய்' என்றார்.

    "இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் பொழுதுபோக்குப் படம். யாரும் முகம் சுழிக்காத வகையில் காமெடிக் காட்சிகளை அமைத்துள்ளோம்.

    தற்போது பேய்க் கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா வகையான படங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    வெள்ளிமூங்கா

    வெள்ளிமூங்கா

    இதுவரை வெளிவராத ஒரு ரகத்தில் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து' சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "வெள்ளிமூங்கா" படத்தினை நானும், சுந்தரும் பார்த்தோம். இருவருக்கும் பிடித்திருந்தது. இதையே தமிழில் ரீமேக் செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்தோம்.

    ஒரே ஒரு கோடு

    ஒரே ஒரு கோடு

    மலையாளப் படத்தினை முழுமையாக அப்படியே ரீமேக் செய்யாமல் அந்தப் படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து,அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக எடுத்திருக்கிறோம். அதாவது அந்தப் படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் ஒரு ரோடு போட்டிருக்கிறோம். மலையாளப் படத்தின் இயக்குநர் இந்தப்படத்தினைப் பார்த்தால் இப்படி கூட எடுக்கலாமா?என்று யோசிக்கும் அளவிற்கு 'முத்தின கத்திரிக்கா' படத்தினை எடுத்துள்ளோம்.

    மாடர்ன் பாக்யராஜ்

    மாடர்ன் பாக்யராஜ்

    நான் இயக்குனர் ஆவதற்கு முன்பே என்னிடம் ஒரு ஐடியா இருந்தது. ஒரு மாடர்ன் பாக்யராஜ் சார் மாதிரி என் படத்தில் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பது தான் அது. அதை இந்தப் படம் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறேன். நான் படத்தின் காட்சிகளை, வசனங்களை எழுதி முடித்த பின் சுந்தர்.சி சாரிடம் காண்பித்தேன். என்னை வெகுவாகப் பாராட்டினார். மேலும் உடனடியாக படப்பிடிப்பினை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் சொல்லிய ஒரு வாரத்தில் நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டோம்.

    ஈஸி

    ஈஸி

    நடிகர்,மற்றும் தயாரிப்பாளர் என்று வெவ்வேறு நபர்கள் இருந்தால், அவர்களிடம் தனித்தனியாக நான் சென்று படத்தினைப் பற்றி, காட்சிகளைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தப்படத்தில் இரண்டும் சுந்தர்.சி சாராக இருப்பதால் எனக்கு எளிதாக இருந்தது.

    ஏன் இந்த தலைப்பு?

    ஏன் இந்த தலைப்பு?

    படத்தில் ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தலைப்பிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். ரொம்ப வருடங்கள் திருமணமாகாமல் பேச்சிலராக இருக்கும் இளைஞர்களைத்தான் 'முத்தின கத்திரிக்கா'என்று சொல்வார்கள். கதாநாயகனை இமிடேட் செய்யக்கூடிய இந்தத் தலைப்பிற்கு ஓ.கே சொன்னதற்கே சுந்தர்.சி சாருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

    என்ன கதை?

    என்ன கதை?

    40வயதான அரசியல்வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி,அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாமல் இருக்கையில்,ஒரு கட்டத்தில் ஒரு பெண் மூலமாக அவரது வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வு அவரை, அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் கதை. படம் முழுவதும் இந்த ஒரு கதாபத்திரத்தின் செயல்பாடுகளைப் பற்றியேதானிருக்கும். அவரை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள், அவருடைய எதிரிகள் யார்? அவரால் ஏன் அரசியலில் சாதிக்கமுடியவில்லை என ஒவ்வொரு காட்சியும் அதனைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றது. பாடல் காட்சிகளும் கதையோடு இணைந்து வரும்படியாகப் படமாக்கியுள்ளோம்.

    சதீஷ்

    சதீஷ்

    கதாநாயகனுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நடிகர், படம் முழுவதும் தோன்றுவார். அந்தக் கதாபத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். அவருடைய அந்த கதாபாத்திரத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல,படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.

    யார் மனமும் புண்படாத வகையில்

    யார் மனமும் புண்படாத வகையில்

    இந்தப் படத்தைப் பொறுத்தவரை,யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம். சண்டைக் காட்சியானாலும், செண்ட்டிமெண்ட் காட்சியானாலும்,காதல் காட்சியானாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்கும். ரசிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அது நிச்சயமாக நிறைவேறும். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது," என்றார்.

    English summary
    Venkat Raghavan, director of Sundar C starrer Muthina Kaththarikkai has denied that there is no double meaning dialogues in the movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X