For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜூலியால் அனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு புதிய சிக்கல்.. இயக்குநர் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

  |

  சென்னை: ஜூலி நடிப்பில் உருவாகியுள்ள அனிதா எம்பிபிஎஸ் திரைப்படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டவர் திருச்சியை சேர்ந்த மாணவி அனிதா. இவரது வாழ்க்கையை அனிதா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் தயாரிப்பாளர் வி.ராஜகணபதி.

  இந்த படத்திற்கு அஜய்குமார் என்பவரை இயக்குனராகவும், பிக் பாஸ் புகழ் ஜூலியை ஹீரோயினாகவும் ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில் இப்படத்திற்கு திடீரென சிக்கல் வந்துள்ளது.

  இதுகுறித்து தயாரிப்பாளர் வி.ராஜகணபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் வி.ராஜகணபதி மற்றும் எஸ்.பாலாஜி தயாரிக்கும் திரைப்படம் 'டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்'. பிளஸ்டூ தேர்வில் பெரும் வெற்றி பெற்றும், தன் மருத்துவர் லட்சியகனவில் திடீரென வந்த நீட் தேர்வு பிரச்சினையால் இன்னுயிர் நீத்தவர் அனிதா.

  பதிவு

  பதிவு

  சமூகத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவரது சோகக்கதையை இளைஞர்களுக்கான, சமூகத்திற்கான சப்ஜெக்டாக எடுக்க விரும்பி இந்த டைட்டிலை செப்டம்பர் 2017ல் தயாரிப்பாளர் சங்கங்களில் முறைப்படி பதிவு செய்து இன்று வரை தன்னுடைய பேனரில் வைத்துள்ளார். இவர் ஆய்வுக்கூடம் மற்றும் 'A-படம்' எனும் படங்களை தயாரித்து இருக்கிறார். இதில் 'A-படம்' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது .

  மனஸ்தாபம்

  மனஸ்தாபம்

  இதில் டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படம் கடந்த வருடம் 'எஸ்.அஜய் குமார்' எனும் இயக்குனர் இயக்குவதாக திட்டமிடப்பட்டது. தயாரிப்பாளரின் முதல் முக்கிய கண்டிஷன் என்னவென்றால் அனிதா குடும்பத்தினரின் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கான எந்த ஒரு முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

  ஜூலி

  ஜூலி

  மேலும் அனிதா குடும்பத்திற்கும், தயாரிப்பாளருக்கும் காட்டப்பட வேண்டிய பவுண்டடன் (BOUNDED) ஸ்கிரிப்ட்டும் அவரால் கொடுக்க இயலவில்லை. இது சம்பந்தமாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருடனும், அனிதா சகோதரருடனும் இயக்குனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அனிதா குடும்பத்தாரின் முக்கிய கோரிக்கையே அனிதா கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கக்கூடாது என்பது தான்.

  சம்பந்தமில்லை

  சம்பந்தமில்லை

  ஆனால், அதற்கு அஜய் குமார் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான காரணங்களினால் `தயாரிப்பாளர் இயக்குனரிடமிருந்து விலகி தானே அனிதா குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகு படம் எடுக்க போவதாக கூறிவிட்டார். இதனால் தயாரிப்பாளர் அனிதா குடும்பத்தினருடன் பல முறை நேரிலும் போனிலும் தொடர்பு கொண்டு தானே இப்படம் எடுப்பதற்கான முயற்சிகளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர்களும் அதற்கான ஒப்புதலை மனப்பூர்வமாகவும் நட்பு ரீதியாகவும் அளித்துள்ளனர். எனவே எஸ். அஜய் குமார் அவர்களுக்கும் டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறோம்.

  பயன்படுத்தக் கூடாது

  பயன்படுத்தக் கூடாது

  இதற்கிடையே அஜய்குமார் என்னுடைய டைட்டிலிலேயே புதிய படம் எடுக்க ஆரம்பித்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனக்கு சொந்தமான இந்த 'டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்' எனும் தலைப்பை அவரோ அல்லது வேறு எவரும் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் எமது தயாரிப்பு நிறுவனமான 'மாங்காடு அம்மன் மூவிஸ்' சார்பில் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.

  நம்பிக்கை

  நம்பிக்கை

  எங்கள் நிறுவனமான மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் நாங்கள் எடுக்கும் "டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்" படத்தில் அனிதாவின் தந்தையாக நான் நடிக்கிறேன். அனிதாவின் அண்ணன் மணிரத்னம் ஆக பெரம்பூரை சேர்ந்த எஸ்.ராஜன் என்பவர் அறிமுகமாகிறார். இப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும், அரசுக்கும் நல்ல செய்தியை கொண்டு சொல்லும் என்பதுடன் விருதுகள் பலவும் பெற்றுத்தரும் வகையிலும் இருக்கும் என உறுதியளிக்கிறோம்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Read more about: julie ஜூலி
  English summary
  The producer of the biopic Dr.Anitha MBBS, V.Rajaganapathy announced that he had removed actress Julie and director Ajay Kumar from the movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X