அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்!

சென்னை: சேதுராமனின் மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பரான மருத்துவர் அஷ்வின் பல உருக்கமான தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

'சேது இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை'-அஸ்வின் விஜய்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் மருத்துவர் சேதுராமன். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேது, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சேதுராமன், திரைத்துறையை சேர்ந்த பலருக்கும் ஆஸ்தான தோல் சிகிச்சை மருத்துவராக இருந்து வந்துள்ளார். பலருடனும் நல்ல நட்பை பாராட்டி வந்துள்ளார்.

சேது மரணம்

சேது மரணம்

இந்நிலையில் நடிகர் சேதுராமன் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் அகால மரணமடைந்தார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் இளம் மனைவியையும் ஒன்றரை வயது குழந்தையையும் விட்டுவிட்டு சேது மரணமடைந்தது பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெருங்கிய நண்பர்

நெருங்கிய நண்பர்

சேதுவின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சேதுவின் உடல் நேற்று பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் சேதுவின் நெருங்கிய நண்பரான டாக்டர் அஷ்வின் விஜய், சேது குறித்து பல உருக்கமான தகவல்களை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பழையப்படி இருக்காது

பழையப்படி இருக்காது

இருவரும் காரில் ஒன்றாக பயணிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள அஷ்வின், சேது நீங்கள் இல்லலாமல் என் வாழ்க்கை பழையப்படி இருக்காது. என் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான நாள். 20 ஆண்டுகால நட்பு, சகோதரத்துவம், இந்த உலகத்தின் மீதும் இளைஞர்கள் மீதும் நாம் கொண்டிருந்த பார்வை, இந்த உலகத்திற்கு நன்மையையும் மகிழ்ச்சியையும் மட்டுமே கொடுக்க நாம் முடிவு செய்திருந்தோம்.

என்னில் ஒரு பகுதி

நீங்கள் போகும்போது என்னில் ஒரு பகுதியை எடுத்துச் சென்று விட்டீர்கள், அது எப்போதும் காலியாகதான் இருக்கும். மக்களுக்கான ஒரு சிறிய கோரிக்கை, அவர் கார்டியாக் அரெஸ்ட்டால்தான் இறந்தார் கொரோனாவால் இல்லை. இந்த நேரத்தில் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

வலி மிகுந்த நாள்

வலி மிகுந்த நாள்

மற்றொரு பதிவில் நடிகர் சேது ஊஞ்சலில் படுத்திருக்க தான் அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதோடு, நாங்கள் கடைசியாக எடுத்த போட்டோ இது. நான் இன்னும் அதிகமாக எடுத்திருக்க வேண்டும். எனது பிறந்தநாளை நான் ஒருபோதும் ஊடகங்களில் அறிவித்ததில்லை, ஆனால் மார்ச் 26 நீங்கள் எங்களை விட்டுச் சென்ற நாளாக வலி மிகுந்ததாகிவிட்டது.

கடைசி அழைப்பு

எனது பிறந்தநாளில் நான் பதிலளித்த முதல் தொலைபேசி அழைப்பு உங்களுடையதுதான், நீங்கள் வாழ்த்து சொல்லும் போது வேடிக்கையாக என்னிடம் "மச்சான், கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு உன்னுடைய பிறந்தநாளுக்கு வெட்டுவதற்கு என்னிடம் பிரெட் மட்டுமே உள்ளது" என்று சொன்னீர்கள். அதுதான் உங்களின் கடைசி அழைப்பாக இருக்கும் என்பதை உணரவில்லை. இனி வரவிருக்கும் ஆண்டுகளில் மார்ச் 26 எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மருத்துவ அறிவுரைகள்

மருத்துவ அறிவுரைகள்

சேதுராமனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. தோல் நிபுணரான சேதுராமன் வெறும் மருத்துவராக மட்டுமின்றி அடிக்கடி மக்களுக்கு தேவையான சில மருத்துவ அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குறிப்புகளையும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X