twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நிதியுதவி.. குறைச்சலா இருக்கேன்னு கிண்டல்.. சீறிய திரெளபதி இயக்குநர்.. இப்படி சொல்லிட்டாரே!

    |

    சென்னை: நாடக காதலை மையமாக வைத்து திரெளபதி படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் ஜி. மோகன், கொரோனா பயத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்.

    சாலையோரம் வாழும் மக்களுக்கு உணவளிக்கும் கருணை உள்ளங்கள் டிரஸ்ட்டுக்கு ஆதரவளித்துள்ள இயக்குநர் மோகன், தனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

    மேலும், தொடர்ந்து, கொரோனா அச்சத்தால், உணவின்றி மக்கள் தவித்தால், உதவவும் தயார் என முன் வந்துள்ளார்.

    அமேசானில் திரெளபதி

    அமேசானில் திரெளபதி

    சாதி படம் என்ற முத்திரை குத்தப்பட்ட திரெளபதி திரைப்படத்தை, திரையரங்குகளில் வெற்றிப் படமாக மாற்றிக் காட்டியவர் இயக்குநர் ஜி. மோகன். 18 நாட்களில் தியேட்டர்களில் இருந்து திரெளபதி படம் வெளியேறினாலும், தற்போது, அமேசான் பிரைமில் அந்த படத்தை கண்டு களிக்க இயக்குநர் மோகன் ஏற்பாடு செய்துள்ளார்.

    உதவும் கரம்

    கொரோனா வைரஸ் காரணமாக சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையோரம் வாழும் மக்கள் உணவின்றி திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. இதனை தடுக்க தன்னால் இயன்ற உதவிகளை திரெளபதி படத்தின் இயக்குநர் செய்து வருகிறார்.

    பத்தாயிரம்

    இந்நிலையில், கருணை உள்ளம் டிரஸ்ட்டை சேர்ந்த சிலர், சாலையோரத்தில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கும் ஒரு குழுவாக உருவாகி உதவி செய்து வருகின்றனர். அவர்களின் செயல்களை பாராட்டிய இயக்குநர் மோகன், தனது சார்பாக 10 ஆயிரம் ரூபாயை அந்த குழுவினருக்கு அளித்துள்ளார். அதன் ஸ்க்ரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பத்து கோடி லாபம்

    "திரெளபதி படம் 10 கோடி லாபம் வந்ததுனு சொன்னாப்படி ஒரு கோடி செலவு பண்ணா என்னவாம்?" என ஆதிரன் எனும் நெட்டிசன் கமெண்ட் போட, கோபம் கொண்ட திரெளபதி பட இயக்குநர், "வயசுல பெரியவராக இருக்கிறார்.. மூளை அளவு சிறியதாக உள்ளது.. உதவவும் மனம் இல்லை.. உதவும் மனிதத்தையும் மதிப்பது இல்லை.. உதவுபவர்களை சென்றடையவும் விடுவதில்லை.. இவங்க மட்டும் வாழனும்.. வேற எவனும் வாழ கூடாது" என கடுப்பாகி உள்ளார்.

    English summary
    Draupathi Director Mohan G got tensed by a netizen troll comment. He said, No brain to you and never do or let do such social activity things.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X