Just In
- 1 hr ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 11 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 16 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- Sports
கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி
- News
டெல்லி போராட்ட சம்பவம்... இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அய்யய்யோ.. இது பேய் மிரட்டலா இருக்கே.. ஒரே வாரத்துல இத்தனை கோடிகளா.. திரௌபதி கலெக்ஷன கேளுங்க!
சென்னை: திரௌபதி படத்தின் ஒரு வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷென் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திரௌபதி படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்தின் ட்ரெயிலருக்கே பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் பல தடைகளை தாண்டி திரௌபதி படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் 330 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் ரிலீஸான தியேட்டர்கள் விழாக்கோலம் பூண்டன.
விந்து தானம் தாராளமா பண்ணலாம்.. தாரள பிரபு நாயகி தன்யா ஹோப் கலகல பேட்டி!

பாராட்டு
படத்தில் நாடகக்காதல் குறித்து வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. இதனால் சில சமூகத்தினர் படத்திற்கு பெரும் வரவேற்பு கொடுத்ததோடு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். மேலும் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் படம் ரிலீஸான முதல் இரண்டு நாட்களிலேயே 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

பதிலடி
படம் ஹிட்டானதால் படத்தின் ட்ரெயிலர் வெளியானபோது கடுமையாக விமர்சித்த பலருக்கும் படத்தின் இயக்குநரான மோகன் ஜி பதிலடி கொடுத்து வருகிறார். திரௌபதி திரைப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டிய நிலையில் அரசியல் பிரமுகர்களும் பார்த்து ரசித்து பாராட்டினர்.

ரூ. 10 கோடிக்கு மேல்
இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன நிலையில் படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதனை படத்தின் இயக்குநரான மோகன் ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
|
மக்களுக்கு நன்றி
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது... இதுவரை 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது.. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சி திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

பல மடங்கு வசூல்
திரௌபதி படம் 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அதுவும் தயாரிப்பாளர் என யாரும் இல்லாமல் கிரவுட் ஃபன்டிங் முறையில் படம் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் செய்த செலவை விட பல மடங்கு வசூலை குவித்திருக்கிறது படம். சமீப காலத்தில் வெளியான படங்களில் திரௌபதி படம் தான் செலவை விட பல மடங்கு வசூலை குவித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.