»   »  "கிங்"கைச் சந்தித்த நம்ம ஊரு 'காக்காமுட்டை'க்கு பெரிய விசில் அடிங்க...!

"கிங்"கைச் சந்தித்த நம்ம ஊரு 'காக்காமுட்டை'க்கு பெரிய விசில் அடிங்க...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காக்கா முட்டை படக்குழுவினர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை சந்தித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பொன் முட்டை என பாராட்டப் படுகின்ற படம் காக்காமுட்டை. விருதுகளை மட்டுமல்ல வியாபார ரீதியாகவும் வெளுத்து வாங்கி வருகிறது இப்படம்.


இப்படத்தில் நடித்த சிறுவர்களான ரமேஷ் மற்றும் விக்னேஷ் இருவரின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


இன்ப அதிர்ச்சி...

இன்ப அதிர்ச்சி...

இந்த சிறுவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் வீரர் டோணி என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டோணியை சந்திக்க வைத்துள்ளனர்.


டோணியின் சம்மதம்...

மும்பையில் ஒரு விளம்பரப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த டோனியிடம், இது தொடர்பாக "பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்" கூறவும், அவரும் ஓகே கூறிவிட்டாராம். சிறுவர்களிடம் எதுவும் கூறாமல் அவர்களை டோணியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.


முன்னோட்டம் மட்டுமே...

இரண்டு சிறுவர்களுடன் காக்காமுட்டை பட இயக்குநர் மணிகண்டனும் சென்றிருந்தார். காக்காமுட்டை படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், டோணி அப்பட முன்னோட்டத்தைப் பார்த்துள்ளாராம்.


பாராட்டு...

எனவே, இவர்கள் சில காட்சிகளை அவர்களுக்கு போட்டுக் காட்டியுள்ளனர். அவற்றைப் பார்த்த டோணி சிறுவர்களின் நடிப்பை பாராட்டியுள்ளார். மேலும் இரண்டு சிறுவர்களும் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கேட்டு டோணி மிகவும் ஆச்சர்யப் பட்டுப் போனாராம்.


ஹேப்பி... ஹேப்பி...

ஹேப்பி... ஹேப்பி...

டோணியைப் பார்த்ததில் இரண்டு சிறுவர்களும் ரொம்ப ஹேப்பியாம். காக்காமுட்டைப் படக்காட்சிகளைப் பார்த்து பாராட்டிய டோணி, விரைவில் முழுப்படத்தையும் பார்ப்பேன் எனத் தெரிவித்துள்ளாராம்.


பெரிய விசில் அடிங்க...

டோணியுடனான சந்திப்பு குறித்து இரண்டு சிறுவர்களும் கூறுகையில், ‘நம்ம ஊரு காக்காமுட்டைக்கு பெரிய விசில் அடிங்க' என மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.


English summary
It was a dream come true for child actors Ramesh and Vignesh from national award-winning Tamil drama “Kaaka Muttai” to meet their cricketing idol M.S. Dhoni.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil