»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாபாவை வைத்து பணம் பார்க்கும் இன்னொரு முயற்சியை லதா ரஜினிகாந்த் ஆரம்பித்துள்ளார்.

பாபாவில் ரஜினி அணிந்து வந்த காஸ்ட்யூம்களை விற்க ரையோ என்ற புதிய பிராண்டில் துணிகளை விற்க லதா திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து லதா கூறுகையில், இதுவரை ரஜினியின் உருவம் பொறித்த பொருட்கள் அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவரதுஉருவம தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இனி ரஜினி தொடர்பான அனைத்து பொருள்கள், டி சர்ட்ஸ், காஸ்ட்யூம்ஸ், செயின், டாலர் போன்றவை ரையோ பிராண்டின் கீழ் வரும். இனி இவற்றை ரையோபிராண்டில் தான் வாங்க முடியும்.

ரையோ பிராண்ட் பொருள்களில் சிட்டிசன் வாட்களில் இருப்பது போல ஹோலோகிராம் சின்னம் இருக்கும். இதன்மூலம் ஒரிஜினல் ரையோ பிராண்டைகண்டுபிடித்து வாங்கலாம். 3 டி கார்டுகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

பிளாட்பாரத்தில் விற்கும் ரஜினியின் படம் பொறித்த பனியன்களை வாங்கிப் போட்டுக் கொண்டு தலைவா.. தலைவா என்று உயிர்விட்டுக் கொண்டிருக்கும்அடிமட்ட ரசிகர்களுக்கு இது இன்னொரு அடியாகும்.

ரஜினியின் அடையாளம் மற்றும் பொருள்களுக்கு ரையோ பிராண்ட் விரைவில் காப்பிரைட் வாங்கிவிடும் என்று தெரிகிறது. இதனால் இந்தச் சின்னத்தைமற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

இந்த பிராண்டட் பொருள்களின் விலை பிளாட்பார கடைகளின் விலையைப் போல பலமடங்கு இருக்கும். இதன்மூலமும் ரசிகர்களுக்கு மொட்டைபோடப்படவுள்ளது.

லதா ரஜினிகாந்த் மேலும் பேசுகையில், பாபா படம் சரியாக ஓடவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

அவர் கூறுகையில், இதுவரை தியேட்டருக்குப் போக மக்கள் அஞ்சினர். டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தாக மக்கள் பயந்தனர். மேலும்பதற்றமான சூழலும் இருந்தது. இப்போது நிலைமை சரியாகிவிட்டது. இனி அனைவரும் தியேட்டருக்கு வருவார்கள். சரியாகச் சொன்னால் இப்போது தான்பாபா ரிலீஸ் செய்யப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பாபா மீது சாணி வீச்சு: பதற்றம்

இதற்கிடையே சென்னையில் பாபா படத்தின் கட்-அவுட் மீது சாணி வீசப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. வில்லிவாக்கத்தில் உள்ள ரஜினி ரசிகர்மன்றம் வைத்திருக்கும் இந்த கட் அவுட்டுக்கு தினமும் பாலாபிஷேகம் நடத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கட்-அவுட்டின் தலையில ஆரம்பித்து கால் வரை சாணி வீசப்பட்டிருந்து. இதையடுத்து நேற்று காலை ரசிகர்கள்சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

ஆனால், பொது மக்கள் சாலை மறியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும் போலீசார் தலையிட்டு சாலை மறியலுக்கு அனுமதி தர முடியாது என்றுகூறியதாலும் போராட்டத்தை ரசிகர்கள் கைவிட்டனர்.

அதே நேரம் சாணி அடித்த நபர்களைப் பிடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.

போலி சி.டிக்கள்: 3 பேர் கைது:

இதற்கிடையே பாபா படத்தின் போலி விசிடிக்களைத் தயாரித்து விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் போலி வி.சி.டிக்கள் நடமாடுவதாக ரஜினி ரசிகர் மன்றத்தில் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்துபோலீசார் சோதனை நடத்தி சன்னதி தெருவில் உள்ள ஒரு வீடியோ கடையில் இருந்த 150 போலி விசிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.

இதைத் தயாரித்த பாஸ்கர், சக்திவேல், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர். போலி விசிடிக்களைஇவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர் ஆகிய இடங்களுக்கும் அனுப்பி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil