பாபநாசம் 2 ...கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஒப்புக் கொள்வாரா கவுதமி ?

சென்னை : மலையாளம் த்ரில்லர் படமான த்ரிஷியம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடித்திருந்தார். பாபநாசம் என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் நெல்லை தமிழ் பேசி நடித்திருந்தார் கமல்.

தற்போது த்ரிஷ்யம் 2 படமும் வெளியாகி விட்டது. இதனை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி முடிந்து விட்டது. இந்த படத்தை வெறும் 45 நாட்களில் படமாக்கி முடித்துள்ளார் டைரக்டர் ஜீத்து ஜோசப்.

ஏற்கனவே மலையாளத்தில் எடுக்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படமும், கடந்த ஆண்டு லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மிக குறுகிய காலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மலையாளம் த்ரிஷ்யம் 2 படத்தை போலவே தெலுங்கு த்ரிஷ்யம் 2 படமும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பாபநாசம் 2 ல் கவுதமி வேணாம்

பாபநாசம் 2 ல் கவுதமி வேணாம்

தற்போது கமலை வைத்து தமிழில் பாபநாசம் 2 படத்தை இயக்க ஜீத்து ஜோசப் திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கமல் கூறி வருகிறாராம். குறிப்பாக பாபநாசம் முதல் பாகத்தில் கமலின் மனைவியாக நடித்த கவுதமியின் கேரக்டரை மாற்ற வேண்டும் கேட்டுள்ளாராம் கமல்.

தலைகீழாக மாறிய நிலைமை

தலைகீழாக மாறிய நிலைமை

பாபநாசம் முதல் பாகத்தில் கமலின் மனைவியாக கவுதமியும், மூத்த மகளாக நிவேதா தாமசும், இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்திலும் அவர்களையே நடிக்க வைக்க ஜீத்து ஜோசப் நினைக்கிறார். ஆனால் தற்போது நிலையை மாறி விட்டதால் படத்தில் மாற்றம் செய்ய கமல் நினைக்கிறார்.

கமல் – கவுதமி பிரிவு

கமல் – கவுதமி பிரிவு

கமலும், பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த கவுதமி 6 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டார். அதற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்காமல், அரசியல் பக்கம் சென்று விட்டார் கவுதமி. தற்போது பாபநாசம் 2 படத்தில் கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க கவுதமி ஒப்புக் கொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Recommended Video

Drishyam 2 படத்தில் நடித்த Lawyer Renukha யார் தெரியுமா?
 முடிந்து போன அத்தியாயம்

முடிந்து போன அத்தியாயம்

சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது கமல் உடனான உறவு பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, தன் வாழ்க்கையில் அது முடிந்து விட்ட அத்தியாயம் என கூறி இருந்தார். அதனால் பாபநாசம் 2 படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி நடிப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.

கவுதமிக்கு பதில் மீனாவா

கவுதமிக்கு பதில் மீனாவா

இதனால் கவுதமிக்கு பதிலாக மீனாவை நடிக்க வைக்க வேண்டும் என கமல் கேட்கிறாராம். மலையாளம் த்ரிஷ்யம் படத்தில் நடித்ததால் தமிழிலும் மீனாவையே நடிக்க வைக்கலாம். அல்லது வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என கமல் கேட்டு வருகிறாராம்.

ஏற்பாரா ஜீத்து ஜோசப்

ஏற்பாரா ஜீத்து ஜோசப்

கமலின் இந்த கோரிக்கையை ஜீத்து ஜோசப் ஏற்றுக் கொள்வாரா என்பது தான் தெரியவில்லை. இது முடிவானால் தான் பாபநாசம் 2 படத்தில் கமல் நடிக்க துவங்குவார். ஒருவேளை கவுதமியின் கேரக்டருக்கு ஏற்ற நடிகை கிடைக்கவில்லை என்றால் இந்தியன் 2 அல்லது விக்ரம் படத்தில் நடிக்க போய் விடுவார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X