கன்ஃபார்ம் ஆன த்ரிஷ்யம் மூன்றாம் பாகம்: ஜார்ஜ் குட்டிக்கு வெல்கம் ட்ரீட் கொடுத்த நெட்டிசன்கள்

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் இரண்டு பாகங்களாக வெளியாகியிருந்தது.

Recommended Video

12th Man Movie Review | Yessa ? Bussa ? | Mohanlal |Unni Mukundan | Jeethu Joseph | Filmibeat Tamil

திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி செய்துள்ளார்.

இதனையடுத்து, த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் கேரக்டரான ஜார்ஜ் குட்டிக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரும்பி பார்க்க வைத்த த்ரிஷ்யம்

திரும்பி பார்க்க வைத்த த்ரிஷ்யம்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், 2013ம் ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம்' திரைப்படம், மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மோகன்லால், மீனா ஆகியோருடன் மேலும் பலர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம், திரையரங்குகளிலும், 2ம் பாகம் நேரடியாக அமேசான் ஓடிடியிலும் வெளியானது. இந்த 2 பாகங்களுமே ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

கொலையை மறைத்த ஜார்ஜ் குட்டி

கொலையை மறைத்த ஜார்ஜ் குட்டி

த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதிக்கு, 2 மகள்கள். அவர்களில் மூத்த மகளை ஆபசமாக போட்டோ எடுத்து மிரட்டும் இளைஞனை, மீனா எதிர்பாராதவிதமாக கொலை செய்துவிடுவார். இதனை மறைத்து தனது குடும்பத்தை ஜார்ஜ் குட்டியான மோகன்லால் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான், படத்தின் கதை. அதுவும் கொலை செய்யப்படும் இளைஞன், போலீஸ் ஆபிஸர் ஆஷா சரத்தின் மகன். இப்படியொரு கதையை பக்கா க்ரைம் திரில்லராக இயக்கியிருப்பார் ஜீத்து ஜோசப். முக்கியமாக த்ரிஷ்யம் படத்தின் திரைக்கதை பாராட்டை பெற்றது.

த்ரிஷ்யம் 3ம் பாகம் கன்ஃபார்ம்

த்ரிஷ்யம் 3ம் பாகம் கன்ஃபார்ம்

திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் சிறப்பான வரவேற்பை பெற்றதால், அதன் 3ம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதனிடையே, த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க 'பாபநாசம்' என்ற டைட்டிலில் வெளியானது. அதேபோல், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டது இந்நிலையில், தற்போது 3ம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் த்ரிஷ்யம் 3ம் பாகத்தை உறுதி செய்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் த்ரிஷ்யம் 3ம் பாகம், விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், த்ரிஷ்யம் 3ம் பாகம் உறுதியானதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். த்ரிஷ்யம் 3 என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்துள்ள ரசிகர்கள், ஜார்ஜ்குட்டி கம்பேக், ஜார்ஜ் குட்டி ரிட்டர்ன்ஸ், ஜார்ஜ் குட்டிக்காக மொத்த உலகமும் வெயிட்டிங் என பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் மோகன்லால் உள்ளிட்ட த்ரிஷ்யம் படக்குழுவினர், மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X