»   »  போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழு முன்பு நடிகை சார்மி ஆஜர்

போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழு முன்பு நடிகை சார்மி ஆஜர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜரானார் நடிகை சார்மி கவுர்.

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு தெலுங்கானா போலீசார் நடிகை சார்மி கவுருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

Drug case: Actor Charmme Kaur appears before SIT

இதையடுத்து சார்மி இது தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் சார்மியை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் விசாரிக்க வேண்டும், அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனிருக்க வேண்டும், விசாரணையை வீடியோ எடுக்க வேண்டும், அவர் அனுமதி இல்லாமல் ரத்த மாதிரி எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சார்மி விசாரணை குழு முன்பு இன்று ஆஜராகியுள்ளார். ஹைதராபாத்தின் நம்பள்ளி பகுதியில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை முமைத் கான் சிறப்பு விசாரணை குழு முன்பு நாளை ஆஜராகிறார்.

English summary
Actor Charmme Kaur on Wednesday appeared before the special investigation team (SIT) of Telangana Prohibition and Excise Department in Hyderabad which is probing a drug racket.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil