»   »  போதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்

போதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கான் சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார்.

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கானுக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

Drug case: Mumaith Khan appears before SIT

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முமைத் கான் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு ஹைதராபாத் வந்துள்ளார். மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் தான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டு உள்ளது.

ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறினார். இதையடுத்து விசாரணைக்காக முமைத் கானும் வெளியேறுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் முமைத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவில்லை.

Drug case: Mumaith Khan appears before SIT

மாறாக விசாரணைக்காக ஒரு நாள் அனுமதி பெற்று ஹைதராபாத் வந்துள்ளார். பிக் பாஸ் விதிகளின்படி எந்த போட்டியாளரும் இடையே வெளியே சென்று வர முடியாது. முதல்முறையாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Mumaith Khan has taken one day leave from Telugu Big Boss show and appeared before the Special Investigation Team (SIT) of Telangana’s excise department probing the Hyderabad drug racket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil