»   »  போதைப் பொருள் பூதம் கிளம்ப காரணமாக இருந்தவரின் அண்ணன் நடிகரிடம் விசாரணை

போதைப் பொருள் பூதம் கிளம்ப காரணமாக இருந்தவரின் அண்ணன் நடிகரிடம் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார்.

போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அவர்கள் ஒவ்வொருவராக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி வருகிறார்கள்.

Drug case: Ravi Teja appears before SIT

நேற்று நடிகை முமைத் கான் ஆஜரானார். இதையடுத்து இன்று பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கில் ரவி தேஜா மீதான குற்றம் என்னெவன்று போலீசார் தெரிவிக்கவில்லை.

முன்னதாக ரவி தேஜாவின் சகோதரர் பரத் ராஜ் கார் விபத்தில் பலியானபோது தான் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அவரது செல்போனில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களின் எண்கள் இருந்தது. முன்னதாக பரத்தும் போதைப் பொருள் வைத்திருந்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள அனைத்து பிரபலங்களுமே இதற்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Telugu movie star Ravi Teja appeared before the Excise department officials in the Hyderabad drugs haul case on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil