»   »  போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அந்த 2 நடிகைகள் யார்?

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அந்த 2 நடிகைகள் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2 நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நாசா என்ஜினியர் உள்பட 2 பேர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டனர். நாசா என்ஜினியரிடம் இருந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சிலருக்கு தொடர்புள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

போதைப் பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழு 2 நடிகைகள், ஒரு நடிகர், 4 தயாரிப்பாளர்கள், 2 இயக்குனர்கள், ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த 2 நடிகைகளில் ஒருவர் பஞ்சாபை சேர்ந்தவராம்.

நடிகைகள்

நடிகைகள்

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் பஞ்சாப் நடிகைக்கு போதைப் பொருள் விஷயத்தில் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அந்த நடிகை யார் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

10 பேர்

10 பேர்

தெலுங்கு திரையுலகை சேர்ந்த 10 இளம் நடிகர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என்று பிரபல சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள அந்த 10 நடிகர்களும் தங்களை பற்றி யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் உடனடியாக திருந்த வேண்டும் என்று அல்லு அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Telangana police have issued notice to 10 celebrities from Telugu film insdustry including two actresses in drugs case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil