Don't Miss!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Finance
ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?
- News
"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்த வார பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாளர் யாரு தெரியுமா? விஜய்சேதுபதி, நயன்தாராவையே ஓட விட்ட விஷ்ணு விஷால்!
சென்னை: இந்த வாரம் விஜய்சேதுபதியின் டிஎஸ்பி, அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடித்த கோல்டு மற்றும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த கட்டா குஸ்தி என மூன்று படங்கள் இன்று வெளியாகின.
கோல்டு தமிழ் படமும் இன்று வெளியான நிலையில், அல்போன்ஸ் புத்திரனின் பழைய நேரம், பிரேமம் மேஜிக் இந்த முறை கோல்டு படத்தில் சுத்தமாக வொர்க்கவுட் ஆகவில்லை.
அதே போல, விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்தாலே படங்கள் ஓடாது என்பதை மீண்டும் ஒரு முறை டிஎஸ்பி மூலமாகவும் உணர்த்தியது அவரது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
DSP Review: வாரியர் படத்தை மறுபடி எடுத்து வச்சிருக்காங்களே.. விஜய்சேதுபதியின் டிஎஸ்பி விமர்சனம்!

டிரெண்டிங்கில் விஜய்சேதுபதி
#VijaySethupathi ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து டிஎஸ்பி எப்படி? என கேட்க DSP என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நல்லாத்தான் இருக்காரு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விஜய்சேதுபதிக்கு என்னதான் ஆச்சு? அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் மட்டும் இப்படி சொதப்புவது ஏன்? வில்லனாக அந்த மிரட்டு மிரட்டுறாரே என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

கோல்டா கவரிங்கா
நேரம், பிரேமம் போன்ற படங்களை போல கோல்டு படம் இருக்காது என ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்து விட்டார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். மேலும், இந்த படத்திற்கு எதற்கு சுத்தமாக ப்ரமோஷனே செய்யவில்லை என்றும் இப்போதான் புரிகிறது என இது கோல்டா? கவரிங்கா? 7 வருஷ காத்திருப்புக்கு இப்படி ஏமாற்றி விட்டீரே அல்போன்ஸ் என கேரளா மற்றும் தமிழ்நாடு ரசிகர்கள் புலம்பித் தீர்த்து வருகின்றனர். ஓ2 வை தொடர்ந்து நயன்தாராவுக்கு இந்த படமும் இந்த ஆண்டு ஃபிளாப்.

காப்பாற்றிய குஸ்தி
இந்த வாரம் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை திருப்தியோடு திருப்பி அனுப்பி வைத்த படம் என்றால் அது கட்டா குஸ்தி மட்டும் தான் என்கின்றனர். கொஞ்சம் கமர்ஷியல் நெடி ஓவராக தூவப்பட்டு இருந்தாலும், காமெடி, கதை, திரைக்கதை என அனைத்தும் ஒர்க்கவுட் ஆன விதத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் இந்த வாரம் தப்பித்தது என்கின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் யாருக்கு
கோல்டு மற்றும் டிஎஸ்பி படங்களைத்தான் முதல் நாளில் ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் சென்று பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி பக்கம் ரசிகர்களின் பார்வை திரும்பி இருக்கும். இந்நிலையில், இந்த மூன்று படங்களில் யார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் என்பது நாளை தெரிந்து விடும். இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் கட்டா குஸ்தி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.