»   »  சாமி 2... ஹாரிசை தூக்கிய ஹரி... மீண்டும் வந்தார் டிஎஸ்பி!

சாமி 2... ஹாரிசை தூக்கிய ஹரி... மீண்டும் வந்தார் டிஎஸ்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த 2003ம் ஆண்டு இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் விக்ரம் - த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 'சாமி' படம் பெரும் வெற்றிபெற்றது. அதன் பிறகுதான் விக்ரம் கேரியரே வேறு மாதிரியானது.

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் ஹரி. சிபு தமீம் தயாரிப்பில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என்று இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.


DSP joins again with Hari in Saami 2

முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். இரண்டாம் பாகத்திலும் அவரே இசையமைப்பார் என்று தகவல் வெளியானது.


ஆனால் 'சாமி 2' ம் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசைஅமைக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


DSP joins again with Hari in Saami 2

ஹரியும் - தேவிஸ்ரீபிரசாதும் இணையும் ஐந்தாவது படம் சாமி 2.

English summary
Devi Sri Prasad joins with director Hari for the 5th time for Saami 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos