உங்க தங்கச்சி நிரோஷா, ராதிகா மேல் கை வைக்கலாமா?.. அந்த வீடியோ அனுப்பலாமா?.. ராதாரவியை விளாசிய பிரபலம்
சென்னை: ராதாரவி கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவர். ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்தவர். இப்போதும் ஒருசில படங்களில் நடித்துவரும் அவர்; டப்பிங் யூனியன் தலைவராகவும் இருக்கிறார். அவர் தலைவராக இருக்கும் சூழலில் அவரை சுற்றி ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாக சின்மயி விவகாரத்தில் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
நடிகவேள் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுபவர் எம்.ஆர்.ராதா. அவரது மகன்களில் ஒருவர் ராதாரவி. தந்தை வழியில் இவரும் நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய்,அஜித், சூர்யா என சீனியர் நடிகர்கள் முதல் ஜூனியர் நடிகர்கள்வரை அனைவருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். அவரது தந்தை போலவே கொஞ்சம் கொஞ்சம் பாடி லாங்குவேஜை கொண்டிருப்பவர் அவர்.
டெரர் வில்லன்: ராதாரவி ஹீரோவாக நடித்தது குறைவுதான். அதேசமயம் வில்லனாக கலக்கியிருக்கிறார். அதிலும் ரஜினிகாந்த்துக்கு முத்து உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினியிடம் நெருங்கி பேசுபவரும் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயோதிகம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டுவருகிறார்.

அரசியலிலும் ஸ்டார்: நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்தவர் ராதாரவி. திமுக, அதிமுக, பாஜக என பல கட்சிகள் அவருக்கு பரிச்சயம். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் அவர் ரொம்பவே நெருக்கமாக இருப்பவர் என்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல் நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் இருந்த அவர் இப்போது டப்பிங் யூனியனுக்கு தலைவராக இருக்கிறார். அவர்தான் பின்னணி பாடகி சின்மயியை சங்கத்திலிருந்து நீக்கினார்.
சர்ச்சைக்கு பெயர் போனவர்: தனக்கு என்ன தோன்றினாலும் அதனை பொது வெளியில் பேசிவிடக்கூடியவர் அவர். நடிகை நயன்தாரா பற்றி திமுகவில் இருந்தபோது அவர் மேடையில் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையை உண்டு செய்தது. மேலும் சில நடிகைகள் குறித்தும் அவர் தரக்குறைவாக பேசியிருக்கிறார். அதேபோல் பிரபலமான ஒருவர் மீது சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு பழி வாங்கத்தான் அவரை சங்கத்திலிருந்து நீக்கினார் என்ற பேச்சும் பலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சங்கீதா பேட்டி: இந்நிலையில் டப்பிங் கலைஞர் சங்கீதா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சாஜி என்பவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் உடனே கதிரவன் பாலு என்பவரிடம் புகார் கொடுத்தேன். அவரோ மேம்போக்காக விசாரித்துவிட்டு இனி அவர் வேலைக்கு கூப்பிடமாட்டார். அவர் கூப்பிட்டாலும் நீங்கள் செல்ல வேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ராதாரவி செய்தது: டப்பிங் யூனியனுக்கு ராதாரவிதான் தலைவராக இருக்கிறார். அவர் இதுவரை எந்தப் பெண்ணையாவது மரியாதையாக பேசியிருக்கிறாரா. ஒரு கூட்டத்தில் அவர், 'சுமதி என்ற டப்பிங் கலைஞரை நான் கையை பிடித்து இழுத்ததாக சொல்கிறார்கள். உனக்கு வேறு பெண்ணே கிடைக்கலையா என்று எனது மனைவி கேட்டார்' என்றார். இவ்வளவுதான் அவர். அதேபோல் ஒரு சவுண்ட் இன்ஜினியர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவருக்கு தவறான வீடியோ அனுப்பினார். அதுகுறித்த விசாரணையில், 'அந்த பையன் டிப்ரஷனில் இருக்கிறான். அதான் அப்படி அனுப்பிவிட்டான்' என ராதாரவி சொன்னார். அவரது மகளுக்கு இப்படி வீடியோ அனுப்பினால் இப்படித்தான் பேசுவாரா. அவரது தங்கைகள் நிரோஷா, ராதிகா நடிகைகள்தான். அவர்கள் மீது யாராவது கை வைத்தால் இப்படித்தான் நடந்துகொள்வாரா?" என்றார்.


Click it and Unblock the Notifications











