Don't Miss!
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி ஸ்டேட்டஸ்...அசத்தல் அப்டேட் வெளியிட்ட டைரக்டர்
சென்னை : இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் "நெஞ்சுக்கு நீதி". Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview Projects தயாரித்துள்ள இந்த படத்தை ராகுலின் ROMEO PICTURES வெளியிடுகின்றது.
உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ள இந்த படம், 2019 ல் போனி கபூர் இந்தியில் தயாரித்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் ஆகும்.
2020 ம் ஆண்டே இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது. திமக தலைவரும் உதயநிதியின் தாத்தாவுமான கருணாநிதியின் சுயசரிதையின் தலைப்பான நெஞ்சுக்கு நீதி என்ற பெயரே படத்திற்கு டைட்டிலாக வைக்கப்பட்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார். இந்த தகவலை ஃபோட்டோவுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் டைரக்டர் அருள்ராஜா காமராஜ்.
திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். "நெஞ்சுக்கு நீதி" படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
அரசியலை மையமாகக் கொண்ட இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ., ஆன பிறகு வெளியாக உள்ள படம் என்பதால் அரசியல் வட்டாரத்திலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரூ.100
கோடி
க்ளப்பில்
இணையும்
மாநாடு...
சிம்பு
கேரியரில்
முதல்
படம்
இதுதானாம்!