Dude Box Office: குறையத் தொடங்கிய டியூட் வசூல்.. 5 நாட்களில் இவ்வளவுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: தீபாவளி விடுமுறையையும் டிராகன் படத்தின் வெற்றியையும் சரியாக பயன்படுத்திக் கொண்டது மைத்ரி மூவி மேக்கர்ஸ். 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரதீப் ரங்கநாதனை வைத்து கீர்த்தீஸ்வரன் இயக்கிய டிராகன் திரைப்படத்தின் 5வது நாள் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது.
தீபாவளியுடன் சேர்ந்து முதல் 4 நாட்களில் டியூட் படத்தின் வசூல் அதிகபட்சமாக 83 கோடி ரூபாய் என அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தினமும் 20 கோடிக்கு மேல் வசூலை தாக்கு பிடித்து வருகிறாரே பிரதீப் ரங்கநாதன் என்றும் 5வது நாளில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் போஸ்டரை மைத்ரி நிறுவனம் வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது சற்றே வசூல் குறைவாக வந்திருக்கிறது.

Sacknilk வெப்சைட் தகவலின் படி டியூட் திரைப்படம் கடந்த 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 51 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
டியூட் 5 நாள் வசூல்: இந்தியாவில் 51 கோடி வசூலை டியூட் படம் அள்ளியிருக்கும் நிலையில், ஓவர்சீஸில் 44 கோடி ரூபாய் வசூலை டியூட் படம் அள்ளியிருக்கிறதா? என்கிற கேள்வி பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஆழ்த்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதல் நாளில் இருந்தே டியூட் படத்தின் உலகளவிலான வசூல் அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், 5 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் 95 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக அறிவித்துள்ளனர்.
காலியான தியேட்டர்கள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான டியூட் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் இந்த தீபாவளிக்கு வசூல் வேட்டை நடத்தியது. ஆனால், தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமையான நேற்றே பல தியேட்டர்களில் பச்சை அடிக்க ஆரம்பித்து விட்டது. புதன்கிழமையான இன்று அனைத்து தியேட்டர்களும் க்ரீனில் தான் உள்ளன. ஒரு சில மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் மட்டுமே ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகின்றன.
நாளை 100 கோடி: டியூட் படம் 5 நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளையுடன் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மீண்டும் பழையபடி வசூல் பிக்கப் ஆகுமா? என்பதை பொறுத்துதான் டியூட் படம் டிராகன் படத்தின் வசூலை முறியடிக்குமா? குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா? என்பது தெரியவரும். எப்படி இருந்தாலும், 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான டியூட் படம் 95 கோடி வசூல் செய்துள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











