டியூட் மைனஸ் இதுதான்.. காறி துப்பமாட்டாங்களானு கேள்வி வரும்.. பிரபலம் இப்படி விமர்சனம் செஞ்சிருக்காரே

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கதில் உருவாகியிருக்கும் டியூட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் டியூட் படத்தின் விமர்சனத்தை கூறியிருக்கிறார்.

லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக பெரிய வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தில் இப்போது நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்பு: வரிசையாக இரண்டு படங்களில் நூறு கோடி ரூபாய் கலெக்ட் செய்த ஹீரோவாக பிரதீப் மாறியிருப்பதாலும், அவருக்கு 2கே கிட்ஸ் மத்தியில் வரவேற்பு இருப்பதாலும் இந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. படத்தின் ப்ரீ புக்கிங்கும் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸைத்தான் பெற்றது. ரசிகர்களும் ஆவலோடு படம் பார்க்க இன்று தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள்.

Dude Movie Review By Cheyyaru Balu He says Second Half is Average
Photo Credit:

கலவையான விமர்சனம்தான்: ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. ஷாஜஹான், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை கலந்து இயக்குநர் கொடுத்திருக்கிறார் என்றும்; பிரதீப் ரங்கநாதனும் ஒரே மாதிரிதான் நடித்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் சரத்குமாரின் நடிப்பு எல்லாம் சூப்பராக இருக்கிறது என்று கொண்டாடவும் செய்கிறார்கள். ஆனால் டிராகன், லவ் டுடேவை ஒப்பிடும்போது இது சுமார்தான் என்ற ரிசல்ட்தான் வந்திருக்கிறது.

செய்யாறு பாலு விமர்சனம்: இந்நிலையில் டியூட் படம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "படத்தை இயக்குநர் ஃபன்னாக கொண்டு சென்றிருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்திலும் அதகளம் செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதி காமெடி எல்லாம் கலந்து செல்கிறது. இடைவேளைக்கு 20 நிமிடங்கள் முன்பு அருமையாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.

டிராகனுக்கு இணையில்லை: டிராகன் படத்துக்கு இணையாக இந்தப் படம் இல்லை. இதில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது இரண்டாம் பாதியில் ரசிகர்கள் யூகிக்கும்படியாகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதியை இன்னும் நறுக்கென்று வைத்திருக்கலாம், ட்விஸ்ட்டான சீன்களை வைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது. பிற்போக்குவாதிகள் இந்தக் கதையை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

இது சாத்தியமா?: படத்தில் நடக்கும் ஒரு விஷயம் மிடில் கிளாஸோ அல்லது அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்திலோ நடக்குமா? சொந்தக்காரர்கள் எல்லாம் காறி துப்பமாட்டாங்களா கழுவி ஊற்றமாட்டாங்களா என்ற கேள்விகள்கூட இருக்கின்றன. இதையெல்லாம் மீறி படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து இயக்குநர் செயல்பட்டிருக்கிறார். சாய் அபயங்கரின் இசை அசத்தும்படி இல்லாவிட்டாலும் படம் தொய்வடையும்போது தூக்கி நிறுத்துகிறது. இதையெல்லாம் மீறி இந்தப் படத்தை பசங்க கொண்டாடிவிடுவார்கள். இரண்டாம் பாதியை மட்டும் இன்னும் நன்றாக செய்திருந்தால் டியூட் சூப்பர் டூப்பர் ஹிட்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X