டியூட் பாசிட்டிவ் விமர்சனம்.. ரஜினிகாந்த் ஸ்டைல்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்புக்காகவே படம் பார்க்கலாம்!

சென்னை: டியூட் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டியூட் திரைப்படம் ஆன் அண்ட் ஆஃப் ஆகவே உள்ளது. சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு சரவெடி படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜென் ஸீ கிட்ஸ்களை டார்கெட் செய்து எடுத்துள்ள இந்த டியூட் திரைப்படம் சிவகார்த்திகேயனின் டான் படத்தை போல பிக்கப் ஆனால் மிகப்பெரிய வெற்றியை பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதே சமயம் படத்தில் உள்ள சிக்கல்கள் பொதுமக்களை கவரவில்லை என்றால் இந்த தீபாவளி விடுமுறை கலெக்‌ஷனை மட்டுமே படம் அள்ளும் நிலையும் உள்ளது.

Dude Positive Review Pradeep Ranganathan and Mamitha Baiju s friendship zone works well

டியூட் படத்தை இந்த 5 காரணங்களுக்காக தாராளமாக தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம் என்பது குறித்த பாசிட்டிவ் விமர்சனத்தை இங்கே காணலாம்.

சூப்பர் ஸ்டார் மெட்டீரியல்: தமிழ் சினிமாவில் விஜய், அஜித்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மெயின் ஸ்ட்ரீம் ஆடியன்ஸை கவரக்கூடிய ஆற்றலை பிடித்த நிலையில், தனுஷுக்கு தம்பி போல இருக்கும் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ரஜினிகாந்தின் ஸ்டைல் மேஜிக்கை வைத்து கோலிவுட் ரசிகர்களை கவரும் முயற்சியில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். செல்போனை எடுத்து ஸ்டைலாக பிடிப்பதில் இருந்து, சாக்லேட் கவரை கடித்து இழுத்து சாப்பிடுவது என மேனரிஸம் அள்ளுகிறது. பட்டை அடித்துக் கொண்டு அம்மா காலில் விழுந்து கெஞ்சுவது, 100 பேர் அடித்தாலும் பாடி தாங்கும் என சட்டையே இல்லாமல் ஆரம்பத்தில் பேசும் வசனம் என எந்த கதை கொடுத்தாலும் நடித்துக் காட்டும் ஹீரோ மெட்டீரியல் என்பதை தாண்டி நான் ஒரு சூப்பர் ஸ்டார் மெட்டீரியல் என்பதை நிரூபித்ததற்காகவே டியூட் படத்தை தாராளமாக பார்க்கலாம். முதல் சீனில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் அவருடைய 1000 வாலா ஆரா குறையவே இல்லை என்பதும் அதுதான் இந்த படத்துக்கு ஊறும் பிளட்டாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சாய் அபயங்கர் யூத் மியூசிக்: பின்னணி இசையில் பிரித்து மேய்ந்துவிட்டார் சாய் அபயங்கர். ஊறும் பிளட் கொடுத்த வைபை மற்ற பாடல்கள் கொடுக்கவில்லை என்றாலும், படத்தை பார்க்கும் போது, அந்த அந்த இடத்துக்கு தகுந்த பாடல்களும் இசையும் ரசிகர்களை எங்கேயும் சலிப்பு தட்டாமல் பார்த்துக் கொண்டது. ஆரம்பத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சாய் அபயங்கரின் இசை டியூட் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்க்க நிச்சயம் ஒரு பெரிய காரணமாக அமையும்.

Dude Positive Review Pradeep Ranganathan and Mamitha Baiju s friendship zone works well
Photo Credit:

சரத்குமாரின் எனர்ஜி: பிரதீப் ரங்கநாதன் தனக்குள் இருக்கும் மொத்த எனர்ஜியும் வெளியே கொண்டு வந்து கொட்டுவது தெளிவாக தெரிகிறது. ஆனால், 71 வயதில் அசால்ட்டாக 40 வயதில் சரத்குமாரை எப்படி படங்களில் ரசிகர்கள் பார்த்தார்களோ அதே துள்ளலான டெரிஃபிக் பர்ஃபார்மன்ஸை காட்டி பின்னி எடுத்து விட்டார். 3 பிஎச்கே படத்தில் செம சைலன்ட்டாக நடித்தவரா இங்கே காமெடியனாகவும் வில்லனாகவும் ரவுண்டு கட்டுகிறாரே என பலரும் வாயை பிளந்துவிட்டனர்.

Dude Positive Review Pradeep Ranganathan and Mamitha Baiju s friendship zone works well
Photo Credit:

மமிதா பைஜு: பிரேமலு படத்தில் மமிதா பைஜு எந்தளவுக்கு பொருந்தி போயிருந்தாரோ அதே போல டியூட் படத்தின் குறள் கதாபாத்திரத்திற்கும் அவர் பொருந்திப் போயிருந்தார். அத்தை பையன் மற்றவர்களை காதலிக்கும் போது தோழியாகவும், அவனது காதல் தோல்விகளை பார்த்து அவன் மேல் காதல் வருவதும், பின்னர் அது நிராகரிக்கப்படும் கலங்குவதும் அதன் பின்னர் கடைசி வரை அத்தை பையன் கூட இருந்தால் தைரியம் இருக்கும் என்று சொல்லும் இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். நானும் நல்லா இருக்கணும், நீயும் நல்லா இருக்கணும்னு செல்ஃபிஷ் கதாபாத்திரத்தில் இருந்து அவரது கேரக்டர் மாறும் இடமெல்லாம் சிறப்பு.

ஆணவக்கொலை: பெண் குழந்தைகளை பெற்று வளர்த்து அனைத்து செல்லமும் கொடுத்து வளர்க்கும் பணக்காரர்கள் கூட சாதி வெறி காரணமாக ஆணவக்கொலை செய்து விடுகின்றனர் என்பதை ஆணி அடித்தார் போல காமெடி கலந்த படமாக கொடுத்துள்ளார் கீர்த்தீஸ்வரன். அதற்காக அவர் எடுக்கும் ரூட் பலருக்கு பிடிக்காமலும் செட் ஆகாமலும் இருந்தாலும், அதற்கான நோக்கம் சரியாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X