»   »  மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்: மே மாதம் புதுவரவு

மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்: மே மாதம் புதுவரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் துல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா கர்ப்பமாக உள்ளார். மே மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.

மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மானுக்கும், அமல் சுபியாவுக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அமல் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டது.

இருப்பினும் இது குறித்து மம்மூட்டியும், துல்கரும் அமைதியாக இருந்தனர்.

திருமணம்

திருமணம்

துல்கர் சல்மானின் உறவுக்காரரான நடிகர் மக்பூல் சல்மானின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் தான் அமல் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

பிரசவம்

பிரசவம்

அமலின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த பிறகு தான் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரிந்தது. அவருக்கு வரும் மே மாதம் குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.

துல்கர்

துல்கர்

துல்கர் சினிமாவில் நடிக்க வரும் முன்பே அமல் சுபியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த மறு ஆண்டு தான் துல்கர் சினிமா துறைக்கு வந்தார்.

அமல்

அமல்

அமல் கர்ப்பமாக இருப்பதை துல்கர் தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் அமலை கர்ப்பிணியாக பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

English summary
Dulquer Salmaan, the young charming actor and wife Amaal Sufiya, are reportedly all set to welcome their first child. Amaal was spotted with a tiny baby bump when the couple recently attended the wedding of Dulquer's cousin brother, Maqbool Salmaan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil