Don't Miss!
- News
"ஆபரேஷன் 111".. எடப்பாடி இறக்கிய மெகா டீம்.. நடப்பது நடக்கட்டும்.. பறந்து போன ஆர்டர்.. ஆஹா செம மோதல்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மீண்டும் பாலிவுட் படத்தில் கமிட்டான நடிகர் துல்கர் சல்மான்.. அதிகாரப்பூர்வ தகவல்!
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது உறுதியாகியுள்ளது.
நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த துல்கர் சல்மான், தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பெரும் வரவேற்பு
தமிழில் கடந்த ஆண்டு துல்கர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரும் ஹிட்டானது. பல அதிரடி திருப்பங்களுடன் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

பாலிவுட்டிலும் தடம்
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிராக வலம் வரும் துல்கர் சல்மான், பாலிவுட் சினிமாவிலும் தடம் பதித்துள்ளார். ஏற்கனவே கர்வான் மற்றும் தி ஸோயா ஃபேக்டர் ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ளர் துல்கர்.

பால்கி படத்தில் ஒப்பந்தம்
தற்போது, மேலும் ஒரு ஹிந்தி படத்தில் கமிட்டாகியுள்ளார். அதாவது இயக்குநர் பால்கி இயக்கும் பாலிவுட் படத்தில் துல்கர் சல்மான் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த தகவலை அப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, என்னுடைய அடுத்த புராஜெக்ட் பால்கியுடன். பால்கி துல்கர் சல்மானை இயக்குகிறார்.

சைக்காலஜிக்கல் த்ரில்லர்
இந்தப் படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக இருக்கும். இந்தப் படத்தின் பணிகளை தொடங்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்.