»   »  சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்க உள்ளாராம்.

நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனின் வாழ்க்கை வரலாறு மாகநதி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்குகிறார்.

சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன்

சாவித்ரியின் கணவர் ஜெமினி கணேசனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் ஜெமினியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

சமந்தா

சமந்தா

மகாநதி படத்தில் சமந்தாவும் உள்ளார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். பத்திரிகையாளர் என்றும், நடிகை ஜமுனாவாக நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஜூன்

ஜூன்

படத்திற்கான பிற நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.

அஷ்வின்

அஷ்வின்

கடந்த 80 ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள். ஆனால் யாருக்கும் மகாநதி என்ற பெயர் கிடைக்கவில்லை. அந்த பெயர் இன்றுவரை சாவித்ரிக்கு மட்டுமே உள்ளது என்று இயக்குனர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Dulquer Salmaan will play late Tamil star Gemini Ganesan in upcoming bilingual film Mahanatis, a biopic on legendary southern actress Savitri, a source said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil