கிங் ஆஃப் கோதா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்... வெறித்தனமான ஆக்சன் மோடுக்கு மாறிய துல்கர் சல்மான்

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் சாக்லேட் பாய் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் சூப்பர் ஹிட் அடித்தது.

சீதா ராமம் படத்தைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் வெளியாஅ 'சுப்' திரைப்படமும் துல்கர் சல்மானுக்கு சக்சஸ் கொடுத்துள்ளது.

துல்கர் சல்மானின் அடுத்து படமான 'கிங் ஆஃப் கோதா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

100 கோடி கிளப்பில் துல்கர் சல்மான்

100 கோடி கிளப்பில் துல்கர் சல்மான்

மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கு, இந்தியிலும் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான 'சீதா ராமம்' படம் துல்கர் சல்மானுக்கு சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்தது. டாப் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் காற்று வாங்கி கொண்டிருந்த நேரத்தில், ஹவுஸ்ஃபுல்லாக ஓடி கவனம் ஈர்த்தது சீதா ராமம்.

கிங் ஆஃப் கோதாவாக என்ட்ரி

கிங் ஆஃப் கோதாவாக என்ட்ரி

இந்தியில் பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த சுப் திரைப்படம் கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஆக்சன் அவதாரம் எடுக்கவுள்ளார் துல்கர் சல்மான். தெலுங்கு, இந்தி என ரவுண்ட் அடித்த துல்கர், இப்போது மீண்டும் மலையாளத்தில் ஒரு மரண மாஸ் ஹிட் கொடுக்க ரெடியாகிவிட்டார். அவரது நடிப்பில் அடுத்து 'கிங் ஆஃப் கோதா' படம் உருவாகி வருகிறது ஏற்கனவே தெரிந்தது தான். இப்போது அந்தப் படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

மெர்சலாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்

மெர்சலாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்

'கிங் ஆஃப் கோதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் தனது ட்வீட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த போஸ்டரில் பரட்டை தலை, வாயில் பீடி என படு லோக்கல் ரவுடியாக வித்தியாசமான லுக்கில் மிரட்டியிருக்கிறார் துல்கர் சல்மான். ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத மஜாவான லுக்கில் துல்கர் சல்மான் தோற்றமளிக்கும் கிங் ஆஃப் கோதா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம்ம வைரலாகி வருகிறது. லவ்வர் பாயாக நடித்து வந்த துல்கர் சல்மான், இந்தப் படத்தில் இறங்கி சம்பவம் செய்வார் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

காரைக்குடியில் சூட்டிங்

காரைக்குடியில் சூட்டிங்

துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கி வருகிறார். பிரபல மலையாள இயக்குநர் ஜோஷியின் மகனான அபிலாஷ் ஜோஷி, துல்கர் சல்மானின் தோஸ்த்து படா தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடிக்கும் 'கிங் ஆஃப் கோதா' ஷூட்டிங் தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தரமான தர லோக்கல் கேங்ஸ்டர் கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்து வருவதாகவும், விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X