»   »  துல்கர் சல்மான்... 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்!

துல்கர் சல்மான்... 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய இளம் நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர் துல்கர் சல்மான். நுட்பமான நடிப்பு, நல்ல கதைத் தேர்வு என பக்கா புரொபஷனல் நடிகர்.

கேரளாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்தாலும், அவரது 25வது படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தமிழ்ப் படமாக அமைந்திருப்பதை பெருமையாக நினைக்கிறார் துல்கர்.

Dulquer Salman completes 25 movies in 6 years

6 வருடங்களில் 25 பேசப்படும் படங்களில் நடித்திருக்கும் அவரைப் பாராட்டும் வகையில், ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் மேனன் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் லோகோவை இன்று மாலை 6:25 மணிக்கு வெளியிடுகிறார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட இதுதான் சரியான நேரம். திரைத்துறையில் துல்கர் சல்மான் 6 வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், ரிது வர்மாவுடன் இணைந்து நடித்திருக்கும் அவரின் 25வது படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் பல ஆச்சர்யங்களும் காத்திருக்கின்றன," என குறிப்பிட்டிருக்கிறார்.

ரொமாண்டிக் படமாக உருவாகி வரும் இந்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். ஃபிரான்சிஸ் தயாரிக்கிறார்.

English summary
Dulquer Salman has completed his 6th year in cinema with his 25th movie Kannum Kannum Kollai Adithaal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil