twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீட்ஸாவுடன் கோக் குடித்த துல்கர் சல்மான் டிரைவர்.. பரிதாப மரணம்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

    |

    சென்னை: மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மானின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மான் சென்னை ஆர்.ஏ.புரம் கிரின்வேஸ்லேன் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    துல்கர் சல்மான் வீட்டில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்த பாஸ்கர் (51) என்பவர் விமான நிலையத்திற்கு நள்ளிரவில் துல்கர் சல்மானை அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டில் வந்து தங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

    கிங் ஆஃப் கோதா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்... வெறித்தனமான ஆக்சன் மோடுக்கு மாறிய துல்கர் சல்மான்கிங் ஆஃப் கோதா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்... வெறித்தனமான ஆக்சன் மோடுக்கு மாறிய துல்கர் சல்மான்

    சென்னையில் வசிக்கும் துல்கர் சல்மான்

    சென்னையில் வசிக்கும் துல்கர் சல்மான்

    மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மான் சென்னையில் உள்ளா ஆர்.ஏ.புரம் கிரின்வேஸ்லேன் பகுதியில் பெரிய வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்த ஆக்டிங் டிரைவர் பாஸ்கர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டிரைவர் மரணம்

    டிரைவர் மரணம்

    வடபழனி ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். துல்கர் சல்மானின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, குடும்பத்தில் உள்ளவர்களை வெளியே கூட்டிச் செல்வது என வேலை பார்த்து வந்த பாஸ்கர் அதிகாலையில் துல்கர் சல்மானை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அவரது வீட்டிலேயே இரவு தங்கினார்.

    பீட்ஸாவுடன் கோக்

    பீட்ஸாவுடன் கோக்

    இரவு உணவுக்கு பீட்ஸாவுடன் கோக் சாப்பிட்டு படுத்துத் தூங்கிய பாஸ்கருக்கு திடீரென நள்ளிரவில் இருமல் அதிகமாக வந்து மயங்கி விழுந்துள்ளார். அருகே இருந்த பணியாட்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழியிலேயே பாஸ்கர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் ஷாக்கிங் தகவலை கூறிய நிலையில், அனைவருக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. நள்ளிரவில் அவர் உட்கொண்ட உணவு சீரணிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    போலீஸார் விசாரணை

    போலீஸார் விசாரணை

    இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸார் துல்கர் சல்மான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி வழக்கும் பதிவு செய்துள்ளனர். டிரைவர் பாஸ்கர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவு வந்தவுடன் தான் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Dulquer Salman Driver Baskar death reason shocks everyone. Police filed a case and sent to post mortem. After the post mortem procedures done only the real death reasons will clear the air.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X