»   »  துல்கர் சல்மான், மம்மூட்டிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

துல்கர் சல்மான், மம்மூட்டிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
மிகுந்த கவலையில் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான்- வீடியோ

திருவனந்தபுரம்: நடிகர்கள் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

துல்கர் சல்மானுக்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக அவருக்கு ரசிகைகள் அதிகம். இந்நிலையில் துல்கரின் தீவிர ரசிகர் ஒருவர் பலியாகியுள்ளார்.

உயிரிழந்த ரசிகரின் பெயர் ஹர்ஷத்

விபத்து

விபத்து

கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் மத்தனூரில் பைக்கில் சென்றுள்ளார் ஹர்ஷத். அப்போது அவர் பைக் மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹர்ஷத் பலியானார்.

ரசிகர்

ஹர்ஷதின் மறைவு செய்தி அறிந்த துல்கர் சல்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஹர்ஷத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மம்மூட்டி

ஹர்ஷத் விபத்தில் பலியானது குறித்து அறிந்த மம்மூட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் மம்மூட்டி.

அறிவுரை

அறிவுரை

பைக்கில் கண்டமேனிக்கு வேகமாக செல்ல வேண்டாம் என்று பெற்றோர் சொன்னால் யாரும் கேட்பது இல்லை. நீங்களாவது உங்களின் ரசிகர்களுக்கு அறிவுரை செய்யுங்கள் துல்கர் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

English summary
Harshad PK a die hard fan of Dulquer Salman died in a road accident in Kerala. Dulquer and his dad Mammootty have expressed their shock and condoled the death of this young fan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil