துல்கர் சல்மானின் சல்யூட் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
கொச்சி : மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.
தமிழில் ஹேய் சனாமிகா என்ற படத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது மலையாளத்தில் சொந்த தயாரிப்பில் சல்யூட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கும் துல்கர் சல்மானின் சல்யூட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக பிரபலமாகி வரும் நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்து இப்போது பாலிவுட் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார்.

ஹேய் சனாமிகா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்கத்திலே ஹேய் சனாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

சல்யூட்
சாக்லேட் பாய் முதல் ரவுடி வரை எந்த கதாபாத்திரமும் என்றாலும் துல்கர் சல்மானுக்கு கச்சிதமாக அமைய எப்பொழுது மிரட்டலான போலீஸ் அதிகாரியாக சல்யூட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்பியது.

படப்பிடிப்பு நிறைவடைந்து
மேலும் சல்யூட் திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பில் துல்கர் சல்மான் தயாரித்து வர பாலிவுட் நடிகை டயானா பெண்டி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்பொழுது அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுபற்றி இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளதாவது " தொழில்நுட்ப கலைஞருக்கும் தயாரிப்பாளர் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்னுடைய மனதுக்கு நெருக்கமானது. என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications