6 நாளில் 50 கோடியை நோக்கி நகரும் சீதா ராமம்.. கலெக்ஷன்ஸ் சும்மா மிரட்டுதே!

சென்னை : நடிகர் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது சீதா ராமம் படம்.

Recommended Video

Sita Ramam Movie Review | Yessa ? Bussa ?| Sita Ramam |Dulquer Salmaan|*Review

தெலுங்கில் உருவான இந்தப் படம் இந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் பான் இந்தியா படமாக ரிலீசாகியுள்ளது.

இந்தப் படம் காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

சீதா ராமம் படம்

சீதா ராமம் படம்

நடிகர் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் தெலுங்கில் உருவாகி மற்ற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது சீதா ராமம். இந்தப் படத்தின் தலைப்பே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படமும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

பாகிஸ்தானிய பெண்ணாக ராஷ்மிகா

பாகிஸ்தானிய பெண்ணாக ராஷ்மிகா

படத்தில் பாகிஸ்தானிய பெண்ணாக நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. சீதாவிடம் ஒரு கடிதத்தை சேர்க்கும்வகையில் அவர் இந்தியாவிற்கு வர, அவரை கண்டுபிடிக்க முடியாமல், ராமாக நடித்துள்ள துல்கர் சல்மானை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதையடுத்து பிளாஷ்பேக் காட்சிகளாக துல்கர் -மிருணாளின் காதல் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.

அழகிய காதல் கதை

அழகிய காதல் கதை

நீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய காதல் கதையாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களை இந்தக் காதல் கட்டிப் போட்டுள்ளது. இதுபோன்ற கேரக்டர்கள் என்றால் துல்கருக்கு அல்வா சாப்பிடுவது போல. பின்னி பெடலெடுத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

6 நாட்களில் சிறப்பான வசூல்

6 நாட்களில் சிறப்பான வசூல்

கடந்த 6 நாட்களில் சர்வதேச அளவில் சிறப்பான கலெக்ஷனை இந்தப் படம் ஈட்டியுள்ளது. அழகான காதல் கதை என்றால் ரசிகர்கள் எப்போதுமே ஆதரவு தருவார்கள். அந்த வகையில் இந்தப் படமும் வசூலில் மிரட்டி வருகிறது. படம் வெளியாகி கடந்த 6 நாட்களில் படத்தின் வசூல் 40 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது.

ரூ 40 கோடியை தாண்டிய வசூல்

ரூ 40 கோடியை தாண்டிய வசூல்

முதல் 6 நாட்களில் தெலுங்கு மாநிலங்களில் 17 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 7 கோடி ரூபாயும் கேரளாவில் 3.5 கோடி ரூபாயும் இந்தியாவின் மற்ற இடங்களில் மீதமுள்ள வசூலையும் இந்தப் படம் எட்டியுள்ளது. படம் எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் சிறப்பான கலெக்ஷனை பெற்று வருகிறது.

சிறப்பான மிருணாள் கேரக்டர்

சிறப்பான மிருணாள் கேரக்டர்

அடுத்த இரண்டு வாரங்களில் 8 நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக வரவுள்ள நிலையில், படத்தின் கலெக்ஷன்ஸ் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் மிருணாள் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கேரக்டரில் முன்னதாக பூஜா ஹெக்டே நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X