துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது!
சென்னை: துல்கர் சல்மான் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் ரசிகர்கள் COMMON DP வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துல்கர் சல்மானின் வரவிருக்கும் படங்கள் குறித்தும் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

துல்கர் சல்மானுக்கு மலையாள சினிமா, தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி தெலுங்கிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கீர்த்தி சுரேஷின் 'மகாநதி' திரைப்படத்தில் ஜெமினி கணேசனாக நடித்த பிறகு தெலுங்கில் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பெயரிடப்படாத இந்த படத்தில் துல்கர் சல்மான் லெப்டினன்ட் ராம் எனும் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திலிருந்து துல்கர் கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

முதல் தோற்றத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான P.S. வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் தோற்றத்தில், 60 களில் உள்ள காட்சி அமைப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











