twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆரும் எல்லீஸ் ஆர் டங்கனும் - தமிழ் படங்களை இயக்கிய அமெரிக்க டைரக்டர்

    By R VINOTH
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் தமிழ் தெரியாத நடிகைகள் இருக்கலாம் ஆனால் தமிழ்த் திரையுலக வரலாற்றில் தமிழே தெரியாத ஒருவர் தமிழ் படங்களை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றால் அவர்தான் எல்லீஸ் ஆர் டங்கன். எம்.ஜி.ஆர், எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவர் எல்லீஸ் ஆர் டங்கன். எம்ஜிஆரை சதிலீலாவதியில் அறிமுகம் செய்தார் அவரது கடைசி படம் எம்ஜிஆர் படமாகவே அமைந்து விட்டது.

    அமெரிக்காவில் பிறந்த டங்கன், பள்ளிப்பருவத்திலேயே கேமராவும் கையுமாக சுற்றியவர். தன்னுடைய வாழ்க்கை சினிமாதான் என்று நினைத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமா துறையை விரும்பி படித்தார். தன்னோடு படித்த மாணிக் லால் டாண்டன் என்பவரோடு சேர்ந்து இந்தியாவிற்கு வந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இங்கு பல படங்களை இயக்கினார்.

    எல்லீஸ்.ஆர்.டங்கனுக்கு தமிழில் மருந்துக்குக் கூட ஒரு வார்த்தையும் தெரியாது. அந்த நிலையிலும் ஆங்கிலம் தெரிந்த தன்னுடைய உதவியாளர்களை வைத்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.

    ஆசை முகம் அறிமுகம்

    ஆசை முகம் அறிமுகம்

    எம்ஜிஆர், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் போன்றவர்களை அறிமுகம் செய்தவரும் எல்லீஸ்.ஆர்.டங்கன் தான். எல்லீஸ் ஆர் டங்கன் அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் சதிலீலாவதி எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் சதிலீலாவதி.

    அம்பிகாபதி

    அம்பிகாபதி

    அதைத்தொடர்ந்து முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்கே தியாகராஜ பாகவதரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவர், டங்கன் தான். அவர் இயக்கிய அம்பிகாபதி படம் 1940 ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமான படமாகத் திகழ்ந்தது அனைவரின் பாராட்டையும் பெற்ற திரைப்படம் அம்பிகாபதி.

    வாராய் நீ வாராய்ய்ய்

    வாராய் நீ வாராய்ய்ய்

    இதனை அடுத்து கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வசனத்தில் மிக சிறந்த படமாக வெளிவந்தது மந்திரிகுமாரி. எம்.ஜி.ஆர் நடிக்க புகழ்பெற்ற பாடல்களான ‘வாராய் நீ வாராய்' ‘உலவும் தென்றல் காற்றினிலே' போன்ற பாடல்கள் இடம்பெற்ற மிக வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் என்றால் மந்திரிகுமாரி. இந்தப்படம் தான் எம்.ஜி.ஆருக்கு திரையுலக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த படமும் கூட. அந்த படத்தையும் இயக்கியவர் எல்லீஸ். ஆர்.டங்கன் தான்.

    டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம்

    டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம்

    அந்தக் காலத்தில் நாதஸ்வர வித்வான் என்று மிகவும் புகழ்பெற்ற டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடிக்க ‘காளமேகம்' என்ற ஒரு அற்புதமான படத்தையும் எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கியிருந்தார் அந்த திரைப்படம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவருடைய கைவண்ணத்தில் வசனங்களாக உருவாகியது அதுமட்டுமல்ல டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த ஒரே திரைப்படமும் காளமேகம் என்ற திரைப்படம் தான்.

    எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மீரா

    எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மீரா

    அதுமட்டுமல்லாமல் பொன்முடி, சகுந்தலை போன்ற திரைப்படங்களையும் எல்லீஸ். ஆர்.டங்கன் தான் இயக்கியிருந்தார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு மகா காவியம் என்றால் அது மீரா என்ற திரைப்படம் தான். கல்கி சதாசிவம் அவர்களின் அற்புதமான கதையில் மீராவாக எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்ந்து காட்டியிருந்தார் என்றால் அது மிகையில்லை. அதுவும் எம்.எஸ். சுப்புலட்சுமி மிகச் சிறந்த பாடகி . அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவர் என்றால் நமது எல்லீஸ்.ஆர்.டங்கன் தான். பாபநாசம் சிவனின் அற்புதமான பாடல்கள் இந்த திரைப்படத்தில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்றது என்பது யதார்த்தமான உண்மை.

    கடைசி படம் மந்திரகுமாரி

    கடைசி படம் மந்திரகுமாரி

    தமிழ் திரைப்பட உலகில் ஒரு ஆங்கிலேயர் அழகான தமிழ் படங்களை எல்லாம் வழங்கியிருந்தார் என்றால் அது எல்லீஸ் ஆர் டங்கன். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படத் துறையைச் சார்ந்த ஒரு மகா மேதை 2001 ஆம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார் அவர் இயக்கிய கடைசி திரைப்படம் நமது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த மந்திரிகுமாரி தான்.


    English summary
    If someone who doesn't know Tamil in the history of Tamil cinema has directed Tamil films and succeeded, he is the one and only Ellis R. Duncan. He was introduced likes MGR, MK.Thyagaraja Bhagavathar, T.N.Rajaratnam Pillai and M.S.Supulakshmi to the top of the fame.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X