»   »  கூகுள் பார்த்துதான் சினிமாவே கற்றுக் கொண்டேன்! - துருவங்கள் பதினாறு இயக்குநர்

கூகுள் பார்த்துதான் சினிமாவே கற்றுக் கொண்டேன்! - துருவங்கள் பதினாறு இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் ஒரு படத்தின் வெற்றி விழாவை, படம் வெளியாகி முதல் ஷோ முடிந்ததுமே கொண்டாடிவிடுகிறார்கள்.

ஆனால் துருவங்கள் பதினாறு டீமோ, படம் 75 நாட்களை வெற்றிகரமாகக் கடந்த பிறகுதான், வெற்றி விழா கொண்டாடினார்கள். காரணம், அந்தப் படம் பெற்ற உண்மையான வெற்றி.


Duruvangal Pathinaaru thanks giving meet

படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன், ரொம்ப இளம் வயசுக்காரர். யாரிடமும் உதவியாளராகக் கூட இல்லாமல் இன்டர்நெட்டில் சினிமா கற்று படம் இயக்க வந்தவர்.


வெற்றி விழாவில் அவர் பேசுகையில், "நான் ஊட்டியைச் சேர்ந்தவன். குடும்பத்துடன் கோவையில் வசிக்கிறோம். நடுத்தர குடும்பம்.


சினிமா ஆசையில் சென்னை வந்தேன். பிறகு, இந்த கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடினேன். இருபத்தியொரு வயது பையனான என்னை நம்பி சில கோடிகளை கொடுக்கத் யாரும் தயாராக இல்லை.


என்னை யாரும் நம்பவில்லை என்று அப்பாவிடம் போய் சொன்னேன். நான் உன்னை நம்புகிறேன் என்று சொல்லி, இந்த படத்தை தயாரித்தார். சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கூகுள் பார்த்துதான் கற்றுக் கொண்டேன்.


ரகுமான் என்னை நம்பி நடிக்க சம்மதித்தார். இப்போது, பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். சின்ன பையன், புது டீம் என நினைக்காமல் மணிரத்னம், பிரமாண்ட இயக்குனர் ‌ஷங்கர் பாராட்டினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான் என பலர் சப்போர்ட் செய்தார்கள். அவர்களுக்கு நன்றி...," என்றார்.


கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு... நரகாசுரன்!

English summary
Dhuruvangal Pathinaaru fame Karthik Naren has titled his next movie as Naragasuran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil