யம்மாடியோவ்...என்னம்மா டைவ் அடிக்கிறார் ஏரில்...வாய் பிளக்க வைத்த சார்பட்டா பரம்பரை நடிகை
துபாய் : சார்பட்டா பரம்பரை படத்தின் படத்தில் பிரபலமான நடிகை துஷாரா விஜயன், துபாயின் ஏர் டைவிங் செய்துள்ள போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது.

போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாள் ரோலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் வென்று விட்டார்.
அதைத் தொடர்ந்து அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடத்தவர் தற்போது வசந்தபாலன் இயக்கும் அநீதி, பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அநீதி படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகவும், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் ஜெயராமிற்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
தற்போது துபாயில் வசித்து வரும் துஷாரா விஜயன், சோஷியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் துபாயில் உள்ள பிரபல சுற்றுலா தலம் ஒன்றிற்கு சென்ற துஷாரா, அங்கு ஏர் டைவிங் மேற்கொண்டுள்ளார். அவரது பல நாள் ஆசையில் இதுவும் ஒன்றாம். தான் ஏர் டைவிங் சென்ற போட்டோக்களையும், தனது அனுபவத்தையும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் துஷாரா.
ஸ்கை டைவிங் செய்வதற்கு முன் சில போட்டோக்களை பகிர்ந்த அவர், சில நேரங்களில் நமக்கு தேவைப்படுவது பைத்தியகாரத்தனமான தைரியம் மட்டுமே. அதில் நிச்சயம் ஏதாவது ஒன்று சிறப்பாக வரும் என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். ஸ்கை டைவ் செய்ததன் முழு வீடியோவையும் துஷாரா வெளியிட்டுள்ளார். விரைவில் மீண்டும் பறப்பேன் என்றும் அவர் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











