»   »  சிறைவாசம் - அவஸ்தையில் சஞ்சய் தத்!

சிறைவாசம் - அவஸ்தையில் சஞ்சய் தத்!

Subscribe to Oneindia Tamil

புனே சிறையில் அடைபட்டிருக்கும் நடிகர் சஞ்சய் தத் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறாராம். ஜாமீன் கிடைத்து வெளியே வரும் வரை தாடி, மீசையை எடுக்கப் போவதில்லை என்றும் வைராக்கியமாக இருக்கிறாராம்.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள சஞ்சய் தத், புனே அருகில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தண்டனை பெற்ற கைதிகளுக்கு தரப்படும் சீருடை, கைதி எண் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறையில் தச்சு வேலையும் அவர் செய்து வருகிறார்.

சிறைவாசத்தை மிகுந்த அசவுகரியத்துடன் கழித்து வருகிறார் சஞ்சய் தத். கைதி உடை அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். மேலும், பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதும் அவருக்கு பெரும் சிரமமாக உள்ளதாம்.

கழிப்பறை நாற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறாராம் சஞ்சய் தத். சிறை வாசத்தால் அவரது உடலிலும் அவருக்குப் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. முகத்தில் பருக்கள் வெடித்துள்ளன. நிறைய கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளாம். இதற்காக சில ஆயின்ட்மென்ட்களை சிறை டாக்டர்கள் வழங்கியுள்ளனராம்.

பகல் நேரங்களை எப்படியோ சமாளித்து விடுகிறார் சஞ்சய் தத். ஆனால் இரவு நேரம்தான் அவருக்கு பெரும் சித்திரவதையாக இருக்கிறதாம். இரவெல்லாம் தூங்க முடியாமல் நெளிந்தபடி இருக்கிறாராம்.

ஏற்கனவே வளர்ந்து கிடந்த அவரது நீண்ட தலைமுடி மேலும் நீளமாகியுள்ளது. காரணம் அவர் முடி வெட்டிக் கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டதால். அதேபோல தாடியும், மீசையும் முகத்தை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதாம்.

ஜாமீன் கிடைத்து வெளியே வந்த பின்னர்தான் தாடி, மீசையை எடுப்பேன் என்று சபதம் பூண்டுள்ளாராம் சஞ்சய்தத். 1995ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும் இப்படித்தான் அவஸ்தைப்பட்டார் சஞ்சய் தத்.

தனக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் சஞ்சய்தத்.

கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி சிறைக்குள் கொடியேற்றினர். அப்போது கைதிகள் அனைவரும் அதில் கலந்துகொண்டு தேசிய கீதத்தைப் பாடினர். அவர்களுடன் சஞ்சய் தத்தும் கலந்து கொண்டு தேசிய கீதத்தைப் பாடினாராம்.

இப்போதைக்கு சஞ்சய் தத் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு விஷயம் ரக்ஷா பந்தன் தினம். அன்றைய தினம் சஞ்சய் தத்தின் இரு சகோதரிகளும் சிறைக்கு வந்து தங்களது சகோதரருக்கு ராக்கி கட்டவுள்ளனர். இதனால் அந்த நாளை எண்ணி சிரமங்களை கிரகித்துக் கொண்டிருக்கிறார் சஞ்சய் தத்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil