Just In
- just now
அய்யோ.. இன்னையோடு முடியப் போகுதா.. சோகத்தில் ரசிகர்கள்.. குக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே!
- 38 min ago
‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்
- 1 hr ago
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
- 2 hrs ago
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
Don't Miss!
- Automobiles
செம பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுகள், சூப்பரான வசதிகள்... பிரிமீயம் எஸ்யூவிகளை மிரட்டும் புதிய ஸ்கோடா கோடியாக்!
- Sports
இனிமே தூக்கணும்னா.. தோனியத்தான் தூக்கணும்.. பலருக்கு போடப்பட்ட "ஸ்கெட்ச்'.. கவலையில் சிஎஸ்கே டீம்!
- Finance
ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி வசூல்.. வழிகாட்டுதலை மீறிய SBI!
- Lifestyle
12 ராசிகளுக்குமான பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!
- News
ஒரே மர்மம்.. துரைமுருகனின் பண்ணை வீடு.. கீழே கிடந்த "லிஸ்ப்டிக்".. கடுப்பான மர்மநபர்கள் செய்த பகீர்
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஈஸ்வரி ராவ் கனவிலும் நினைக்காத விஷயத்தை செய்த பா. ரஞ்சித்

சென்னை: காலா படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடிக்கத் தான் தன்னை அழைக்கிறார் பா. ரஞ்சித் என்று நினைத்தாராம் ஈஸ்வரி ராவ்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வர் ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் உலக அளவில் ரூ. 112 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இளம் நடிகைகள் எல்லாம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட ஈஸ்வரி ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
காலா பட வாய்ப்பு வந்ததும் ஈஸ்வர் ராவ் வேறு மாதிரி நினைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

தனுஷ்
சுள்ளான் படத்தில் ரஜினியின் போஸ்டரை பார்த்து நடித்தது எனக்கு நினைவே இல்லை. ஒரு பேட்டியில் போட்டுக் காட்டியபோது தான் நினைவுக்கு வந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை.

அம்மா
காலா படத்தில் நடிக்க அழைத்தபோது ரஜினியின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்கள் என்றே நினைத்தேன். நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தாரும் அப்படித்தான் நினைத்தார்கள்.

ரஜினி
40 வயசாச்சு. விஜய் சாரோட இல்ல ரஜினி சாரோடயும் டூயட் பாடவா கூப்பிட போறாங்க?. நான் ரஜினியின் அம்மா கதாபாத்திரத்திற்கு சரிபட்டு வர மாட்டேன் என்று ரஞ்சித் சாரிடம் தெரிவித்தேன். அவரோ நீங்க தான் ரஜினி சார் ஜோடி என்றார்.

வியப்பு
நான் தான் ரஜினி சார் ஜோடி என்றதும் எனக்கு வியப்பாக இருந்தது. கதைக்கு இப்படி ஒரு ஹீரோயின் தேவைப்பட்டதால் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். ரஜினி சாருடன் நடித்துவிட்டேன் என்பதால் இதே போன்ற கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பது சரியல்ல.

செல்வி
என் கதாபாத்திரம் முக்கியமானது என்று தெரியும். ஆனால் ரசிகர்கள் செல்வியை இந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழ் மக்கள் மட்டும் அல்ல பல மொழி பேசும் ரசிகர்கள் கூட போன் செய்து வாழ்த்துகிறார்கள் என்கிறார் ஈஸ்வரி ராவ்.