»   »  நீ யாரு? எச்ச: ட்விட்டரில் கமெண்ட் போட்டவரை திட்டிய ஆர்.ஜே. பாலாஜி

நீ யாரு? எச்ச: ட்விட்டரில் கமெண்ட் போட்டவரை திட்டிய ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை கலாய்த்தவரை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி எச்ச என்று விமர்சித்துள்ளார்.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். வெட்கம் , மானம், சூடு, சொரணை இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்த்த பலரும் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர்.

அம்பி

அதிமுக மாதிரி திமுகவும் மோசம் தான்.
சரி, எந்த அளவுகோல்ல?
அது அப்டி தான் எல்லாரும் மோசம். பிஜேபி தான் ஒரே நல்லசாய்ஸ்னு முடிப்பான் அம்பி 😂😂 என ஒருவர் பாலாஜி பற்றி ட்வீட்டியிருந்தார்.

கோபம்

கோபம்

பிஜேபி தான் ஒரே நல்லசாய்ஸ்னு முடிப்பான் அம்பி என்று ஒருவர் ட்வீட்டியதை பார்த்த பாலாஜிக்கு கோபம் வந்தது. இதையடுத்து அவர் அந்த நபருக்கு ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.

எச்ச

தம்பி, என் அம்மா ஐயர். அப்பா நாடார். மனைவி பிள்ளை. தங்கை கணவர் கிறிஸ்தவர். என் பசங்களுக்கு ஜாதியை தெரிவிக்கவில்லை. நான் மனுஷன். நீ யாரு? எச்ச என ட்வீட்டியுள்ளார் பாலாஜி.

சாதி அரசியல்

உன்னுடைய அறுவெறுக்கத்தக்க சாதி அரசியலை காட்டி விளையாடுவதை நிறுத்திக் கொள் என்று தன்னை விமர்சித்தவரை கடிந்துள்ளார் பாலாஜி.

English summary
Actor RJ Balaji called someone Echa after that person crticised him for talking about the political parties in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil