அப்போ அந்த தகவல் உண்மை தானா...பிக்பாஸ் பிரபலத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

சென்னை : தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்போடு டாஸ்க்குகளில் அசத்தலாக விளையாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் அக்ஷரா. 84 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த அக்ஷரா, வருணுடன் நல்ல நட்புடன் இருந்து எல்லோரிடமும் பாராட்டை பெற்றார்.

அக்ஷாவிற்கு ஸ்பெஷல் பெருமை

அக்ஷாவிற்கு ஸ்பெஷல் பெருமை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சோஷியல் மீடியாக்களில் சக போட்டியாளர்களுடனும், குடும்பத்தினருடனும் பேட்டி அளித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அக்ஷரா. பிக்பாஸ் வரலாற்றிலேயே துணையுடன் வந்து, துணையுடனேயே வெளியேறிய போட்டியாளர் என்ற பெருமையை அக்ஷரா மட்டும் தான் பெற்றுள்ளார்.

தங்கம் கடத்தலில் தொடர்பா

தங்கம் கடத்தலில் தொடர்பா

இந்நிலையில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அக்ஷராவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவில் கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவகத்தில் அக்ஷராவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் விசாரணை நடந்ததா, இல்லையா என தெரியவில்லை.

அப்போ அது உண்மை தானா

அப்போ அது உண்மை தானா

2013 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்ததாக அக்ஷரா மீது வழக்கு நடந்து கொண்டிருப்பதாக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போதே தகவல்கள் வெளியாகின. ஆனால் அக்ஷரா ஹேர் கலரிங் செய்திருந்ததால் அது அவரில்லை என கூறப்பட்டது. ஆனாலும் அவர் தான் இவர் என கூறி சிலர் சந்தேகத்தை கிளப்பி இருந்தனர். ஆனால் அது உண்மை என்பது போல் தற்போது பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தான் அந்த கதையா

இது தான் அந்த கதையா

அக்ஷரா ரெட்டியின் உண்மையான பெயர் ஸ்ரவ்யா சுதாகர். அவர் மாடலிங் செய்து கொண்டிருந்த போது இவருக்கும், இவரது நெருங்கிய நண்பருக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பல காலம் பேசப்பட்டது. அதற்கு பிறகு தான் ஸ்ரவ்யா தனது பெயரை மட்டுமல்ல உருவத்தையும் மாற்றிக் கொண்டார். முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட அக்ஷரா, தலைக்கும் கலரிங் செய்து கொண்டு வேறு மாதிரி மாறினார்.

மறுபடியும் கிளம்பும் சிக்கல்

மறுபடியும் கிளம்பும் சிக்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான அக்ஷரா, தற்போது வருணுக்கு ஜோடியாக நடிக்க புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். அதோடு பல படங்களில் லீட் ரோலில் நடிக்கவும் இவரிடம் பேசப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் மீண்டும் தங்கம் கடத்தல் வழக்கு தலைதூக்கி உள்ளது அக்ஷராவிற்கு புதிய சிக்கலையும், நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X