ரஜினிக்கு நண்பன் விஷாலுக்கு எதிரியான தியேட்டர் சங்க நிர்வாகிகள்- வீடியோ
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த இருபத்து ஐந்து நாட்களாக புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த மார்ச் 16 முதல் படப்பிடிப்புகளையும் நிறுத்தி முழுமையான வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் சம்பந்தமாக தமிழக அரசு பாராமுகமாகவே நடந்து வருகிறது. சினிமா தொழில் ஸ்தம்பித்து, தொழில் அமைதியின்மை நிலவுகிறது.
திரைப்பட தொழிலில் நேரடியாக, மறைமுகமாக ஈடுபட்டிருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். வேறு எந்த அரசியல் கட்சி தலைமையும் இது போன்று எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
நேற்று முன்தினம் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தலைமையிலான குழுவினர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களையும், போராட்டத்தின் நோக்கத்தையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ரஜினி - விஷான் சந்திப்புக்கு பின் தமிழக அரசு தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தம் பற்றி பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணியுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் அதிகாரிகள்பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
உங்களுக்கு பிரச்சினை என்றால் அரசை தேடி வருகிறீர்கள். முதலாளிகள் நடத்தும் வேலை நிறுத்தத்துக்கு தொழிலாளர்கள் அமைப்பு எப்படிஆதரவு கொடுக்கலாம் என்று செல்வமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வர வேண்டும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம்வேலை நிறுத்தத்தை கைவிடுங்கள், என தமிழக அரசு மறைமுகமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க செல்வமணிக்கு அறிவுரை வழங்தப்பட்டுள்ளதாம்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.