»   »  எதிர் நீச்சல் இயக்குநரின் அடுத்த நாயகன் தனுஷ்

எதிர் நீச்சல் இயக்குநரின் அடுத்த நாயகன் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துரை செந்தில்குமாரின் இரண்டு படங்களுக்கும் தயாரிப்பாளராக இருந்த நடிகர் தனுஷை, தான் இயக்கும் அடுத்தப் படத்தில் இயக்க விருக்கிறார் இயக்குநர் துரை.செந்தில்குமார். எதிர்நீச்சல் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் துரை.செந்தில்குமார்.

எதிர்நீச்சல் படம் அதுவரை வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்த இயக்குனர் துரை.செந்தில்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் மிகப் பிரகாசமான ஒரு எதிர்காலத்தை அளித்தது.

Edhir Neechal Durai Senthilkumar To Direct Danush

எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான நடிகர் தனுஷ் தற்போது தமிழின் சிறந்த தயாரிப்பாளராக காக்கா முட்டை படம் மூலம் உயர்ந்திருக்கிறார்.

எதிர்நீச்சல்

துரை.செந்தில்குமார் இயக்கிய முதல் படம் எதிர்நீச்சல். நடிகராக சிவகார்த்திகேயன் நடித்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சார்பில் வெளிவந்தது. தமிழில் முன்னணி நடிகராக நடிகர் சிவகார்த்திகேயன் உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்த இந்தப் படம் 5 கோடி செலவில் எடுக்கப்பட்டு சுமார் 32 கோடி பணத்தை வசூல் செய்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் மற்றும் முக்கியமான பாத்திரத்தில் நடிகை நந்திதா நடித்து வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அனிருத் இசையில் வெளிவந்த பாடல்களும் ஹிட்டடித்தது குறிப்பிடத் தக்கது.

தயாரிப்பாளர்

அறிமுக இயக்குநர் மற்றும் பெரிய ஹீரோ அந்தஸ்து இல்லாத சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்தார் நடிகர் தனுஷ். முதன்முதலில் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தனுஷை படம் ஏமாற்றவில்லை. அந்த நம்பிக்கை தான் காக்கா முட்டை படத்தையும் தயாரிக்க வைத்தது,படத்திற்கு தேசிய விருது கிடைத்ததுடன் வசூலிலும் தற்போது சாதனை புரிந்து வருகிறது காக்கா முட்டை.

காக்கிச்சட்டை

முதல் படத்தில் இணைந்த அதே கூட்டணி மீண்டும் காக்கிச்சட்டை படத்தின் மூலம் இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்தது. ஆனால் ஒரே ஒரு மாற்றமாக இந்த முறை தமிழின் முன்னணி நடிகராக மாறியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சரிந்திருந்த சிவ கார்த்திகேயன்

சிவாவின் புகழ் எந்த அளவுக்கு இருந்தது என்றால் தொடர்ந்து சில தோல்வி படங்களைக் கொடுத்து தனுஷின் மார்க்கெட் சற்று சரிந்திருந்தது. அப்போது தனது வேலை இல்லாப் பட்டதாரி படத்தை வெளியிட முடியாமல் தனுஷ் தடுமாறிக் கொண்டிருந்த நேரம் தமிழின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை வைத்து நீங்கள் தயாரிக்கும் காக்கிச்சட்டை படத்தின் உரிமையை எனக்குக் கொடுங்கள் உங்கள் படத்தை வெளியிட நான் உதவி செய்கிறேன் என்று சொல்லுமளவிற்கு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தது.

காக்கிச்சட்டையில் நடந்த பனிப்போர்

காக்கிச்சட்டை படத்தின் போதே நடிகர் தனுஷிற்கும், சிவகார்த்திகேயனிற்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. ஆனால் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் காக்கிச்சட்டை படத்தை தனது நிறுவனம் சார்பாக வெளியிட்டார் தனுஷ். 140 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட காக்கிச்சட்டை சுமார் 500 மில்லியனை சம்பாதித்துக் கொடுத்தது. ஒரே ஒரு ஆச்சரியமாக தனுஷின் நடிப்பில் அவரே வெளியிட்ட வேலை இல்லாப் பட்டதாரி படம் சுமார் 50 கோடி வசூலைக் குவித்தது. தனுஷின் மார்கெட் மீண்டும் உயர்ந்தது.

மூன்றாவது முறையாக

துரை.செந்தில்குமார் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்கும் புதிய படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். ஆனால் இந்த முறை துரையின் இயக்கத்தில் நடிக்கப் போவது சிவகார்த்திகேயன் அல்ல தனுஷ். சிவகார்த்திகேயனும், தனுஷும் பிரிந்ததைத் தொடர்ந்து இந்த முறை துரையின் இயக்கத்தில் நானே நடிக்கிறேன், கதையை தயார் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். வேலை இல்லாப் பட்டதாரி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் பிரபு சாலமன் படங்களைத் தொடர்ந்து துரையின் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ் .விரைவில் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகலாம்.

English summary
Actor Dhanush has signed his next with director Durai Senthilkumar, who had already made a couple of movies (Ethir Neechal and yet-to-release Taana) for the actor’s home banner of Wunderbar Films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil