»   »  தேசிய விருதுபெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலையைப் பாருங்கள்!

தேசிய விருதுபெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலையைப் பாருங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எடிட்டர் கிஷோர்... ஆடுகளம் படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற 36 வயது இளைஞர்.

இன்று மரணத்தின் விளிம்பில். விஜயா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மிகச் சிறந்த திறமையாளரை நேற்று நள்ளிரவு வரை யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

மருத்துவமனை நிர்வாகமோ, 'இவர் கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலைதான். இனி சிகிச்சையளிப்பதில் பலனில்லை' என்றே கூறிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த வேதனையில் கிஷோரின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட, அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Editor Kishore in critical condition

ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில்... இப்படி தமிழ் சினிமாவின் தேர்ந்த 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கிஷோர்.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உலகத்தரமான சினிமாவை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு துணை நின்ற இந்த கிஷோரை, கவனிக்கக் கூட நேரமின்றி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் அவருடன் பணியாற்றியவர்கள்.

இயக்குநர் வெற்றிமாறன்தான் கிஷோரை விஜயா மருத்துவமனையில் சேர்த்தாராம். அதன் பிறகு யாருமே அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். உடனிருந்து கவனிக்கவும் ஆளில்லையாம்.

Editor Kishore in critical condition

சரி, அவரது உடம்புக்கு என்ன?

விசாரித்தால், மூளையில் ரத்தம் கசிந்து, இப்போது பெருமளவு பரவி, அவர் நினைவைப் பறித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் அவர் பிழைப்பார்... தயவு செய்து முயற்சி செய்யுங்கள் என்று மருத்துவர்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் கிஷோரின் பெற்றோரும், நண்பர்களும்.

'திரையுலகினர் ஏதாவது செய்ய வேண்டும்... இவ்வளவு புகழ்பெற்ற, அதுவும் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிற ஒரு கலைஞனுக்கே இந்த நிலையா..' என்று குமுறித் தீர்க்கின்றனர் கிஷோரின் நண்பர்கள்.

English summary
National Award winner Aadukalam Editor Kishore is admitted in Vijaya Hospital and his health is in critical condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil