»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் பாரதிராஜாவின் ஈர நிலம் படத்தை கோவையில் திரையிட அம் மாவட்ட வினியோகஸ்தர்கள் தடைவிதித்துள்ளனர். இதை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்முடிவு செய்துள்ளது.

ஈர நிலம் தவிர வேறு சில படங்களுக்கும் இதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவாதிப்பதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று காலையில் நடந்தது. இதற்குசங்கத் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள்பாரதிராஜா, பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:

ஊர் பிரச்சினைக்கெல்லாம் நான் முன்னே சென்று நின்றேன். போராடினேன். இன்றைக்கு எனக்கு ஒரு பிரச்சினைவந்திருக்கிறது. இந்த பிரச்சினைக்கு நான் இப்போது முடிவு காணாவிட்டால் வருங்காலத்தில் எத்தனையோதயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இன்றைக்கு எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சில லட்சங்களை கொடுத்து முடிவுக்கு கொண்டு வந்து விடலாம்.ஆனால் அது எனக்கு நஷ்டம் இல்லை. கஷ்டம் இல்லை. என்னால் அது முடியும்.

ஆனால் இப்போது விட்டுவிட்டால் இதே பிரச்சினை சொடர்கதை ஆகிக் கொண்டிருக்கும். தாஜ்மகால் என்றபெரிய படத்தை யாரும் வாங்க முன் வரவில்லை. அதை நானே ரிலீஸ் செய்தேன். ஒரே ஒரு ஏரியாவுக்கு மட்டும்ஒரு விநியோகஸ்தர் வாங்கினார்.

இந்த படத்தில் எனக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அடுத்து, அல்லி அர்ஜூனா என்ற படத்தையும்நானே ரிலீஸ் செய்தேன். கோவை ஏரியாவுக்கு மட்டும் ஒரு விநியோகஸ்தர் 28 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்.அதில் 5 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தார்.

ஆனால் அந்த செக் வங்கியில் போட்டபோது திரும்பி வந்து விட்டது. பணம் சரியாக போகவில்லை. இதனால்அந்த விநியோகஸ்தர் என்னிடம் வந்து பணம் திருப்பிக் கேட்டார். ஒப்பந்தப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்என்று கூறினேன். அதன்பிறகு அவர் சன் டிவியில் இந்த படத்தை கேட்கிறார்கள்.

விற்றுவிடட்டுமா என்று கேட்டார். நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நானே விற்கிறேன் என்று கூறி தாஜ்மகால்மற்றும் அல்லி அர்ஜூன் என்ற படங்களை 20 லட்சம் ரூபாக்கு விற்றேன். அதில் இருந்து தனக்கு பணம் வேண்டும்என்று அந்த விநியோகஸ்தர் கேட்டார்.

இந்த நிலையில் அவரே ஒரு கடிதத்தை தயார் செய்து வைத்துக்கொண்டு குறிப்பிட்ட லட்சம் பணத்தை கட்டவேண்டும். இல்லாவிட்டால் ஈரநிலம் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று மிரட்டுகிறார். இது என்னகட்டப்பஞ்சாயத்தா?.

இதற்கெல்லாம் ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து கோவை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோவையில் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil