»   »  அதர்வாவின் 'ஈட்டி' ரசிகர்களின் நெஞ்சில் பாய்ந்ததா?

அதர்வாவின் 'ஈட்டி' ரசிகர்களின் நெஞ்சில் பாய்ந்ததா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அதர்வா - ஸ்ரீதிவ்யா நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ஈட்டி. தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இளம் நடிகர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அதர்வா.

சண்டிவீரன் படத்திற்குப் பின்னர் அதர்வா நடிப்பில் உருவான ஈட்டி சுமார் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது.


அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார். அதர்வா, ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ஆடுகளம் நரேன், முருகதாஸ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.


அறிமுக இயக்குநர்

"அறிமுக இயக்குநர் சுவாரஸ்யமாக கதையை நகர்த்துகிறார் எதிர்காலம் பிரகாசம்" என்று இயக்குனரை பாராட்டியிருக்கிறார் சரவணன்.


நல்ல திரைக்கதை

"இப்பொழுதான் ஈட்டி திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். ஒரு நல்ல திரைப்படம், நல்ல கதை, சிறந்த திரைக்கதை மற்றும் படத்தை நன்றாக முடித்திருக்கின்றனர். என்று ஈட்டியைப் பாராட்டி இருக்கிறார் ஸ்ரீகேஷ் கிருஷ்ணன் .மேலும் 4/5 மதிப்பெண் கொடுக்கலாம்" என்றும் இவர் கூறியிருக்கிறார்.


நல்ல தேர்வு

"மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதர்வா முரளி. எல்லா கடின உழைப்புகளுக்கும் இறுதியில் பலன் கிடைக்கும் என்பதை ஈட்டி நிரூபித்து இருக்கிறது. தடகள வீரர் பாத்திரத்துக்கு அதர்வா சரியான தேர்வு" என்று பாராட்டியிருக்கிறார் ஷானு.


2 வது முறை

"ஈட்டி சூப்பர் மற்றும் ஒரு அற்புதமான படம்.நாளை 2 வது முறையாக இந்தப் படத்தை பார்க்கப் போகிறேன்" என்று நாகதர்ஷினி கூறியிருக்கிறார்.


மனதில் நிற்கிறது

"ஈட்டி மனதில் நிற்கிறது நண்பர்களே! படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் இடைவேளைப் பகுதிகள் மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. அதர்வா முரளி & ஸ்ரீதிவ்யாவின் ஈட்டி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்" என்று மொகமத் இல்ஹாம் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் அதர்வா முரளியின் ஈட்டி வெற்றி என்னும் இலக்கை நோக்கி சரியாகப் பாய்ந்திருக்கிறது.
English summary
Adharvaa, Sridivya Starrer Eetti Movie Released Today, written and directed by Ravi Arasu - Audience Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil