»   »  25 வது நாளில் அதர்வாவின் 'ஈட்டி'

25 வது நாளில் அதர்வாவின் 'ஈட்டி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ஈட்டி திரைப்படம் இன்று வெற்றிகரமாக 25 வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 11 ம் தேதி வெளியான திரைப்படம் ஈட்டி. அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கியிருந்த இப்படத்தை மைக்கேல் எஸ்.ராயப்பன் தயாரித்து இருந்தார்.


Eetti Entered 25th Day

அதர்வா நடிப்பில் வெளியான இப்படம் இன்று வெற்றிகரமாக 25 வது நாளைத் தொட்டிருக்கிறது. கடுமையான மழை நேரத்தில் வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிவாகை சூடியிருக்கிறது ஈட்டி.தமிழ்நாடு முழுவதும் இப்படம் நல்ல வசூலை ஈட்டியிருப்பதாக விநியோகஸ்தர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஈட்டி அடைந்த வெற்றியால் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இப்படம் ரீமேக்காக உள்ளது.


வரிசையாக தோல்விகளை ருசித்து வந்த அதர்வா இந்தப் படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறார். மேலும் கிக்காஸ் எண்டெயின்மெண்ட் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.


இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, பாணா காத்தாடி பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.


English summary
Atharvaa, Sri Divya Starring Eetti, Today has Successfully Entered the 25th Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil